
ஏர் இந்தியா ஆட்சேர்ப்பு - 700-க்கும் மேற்பட்ட விண்ணப்பம் குவிந்துள்ளதாக மகிழ்ச்சி!
செய்தி முன்னோட்டம்
டாடா குழுமத்திற்கு சொந்தமான ஏர் இந்தியா விமானிக்களுக்கான ஆட்சேர்ப்பு இயக்கத்திற்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளதாக தெரிவித்துள்ளது.
கடந்த வாரத்தில் மட்டுமே 700-க்கும் மேற்பட்ட விண்ணப்பங்கள் வந்துள்ளதாக ஏர் இந்தியா தெரிவித்துள்ளது.
1,800-க்கும் மேற்பட்ட விமானிகளை கொண்டுள்ள இந்த விமானமானது ஏர் இந்தியா விமான நிறுவனம் போயிங், ஏர்பஸ் உள்ளிட்ட 470 விமானங்களை வாங்க ஆர்டர் செய்துள்ளது.
எனவே, சமீபத்தில் ஏர் இந்தியா வெளியிட்ட ஒரு விளம்பரத்தின்படி, 1,000-க்கும் மேற்பட்ட விமானிகளை பணியமர்த்த இருப்பதாகத் தெரிகிறது.
அதன்படி, ஏர் இந்தியா நிறுவனம் A320, B777, B787 மற்றும் B737 விமானங்களில் கேப்டன்கள் மற்றும் முதல் அதிகாரிகள் மற்றும் பயிற்சியாளர்களை தேடுகிறது.
700 விண்ணப்பங்களுக்கான நேர்காணல் மும்பை, பெங்களூர் மற்றும் டெல்லி நடைப்பெறும் எனக்கூறியுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
Over 700 Pilots Applied After Recruitment Ad, Says Air India https://t.co/us9p3Fe9kv pic.twitter.com/hvPPedhyjo
— NDTV Profit (@NDTVProfit) May 4, 2023