மகளிர் உரிமைத்தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க மீண்டும் வாய்ப்பு - தமிழக அரசு
செய்தி முன்னோட்டம்
கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கான விண்ணப்பங்களை பெறுவதற்கான முகாமினை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த ஜூலை 24ம் தேதி தருமபுரி மாவட்டத்தில் துவக்கி வைத்தார்.
அன்றிலிருந்து தமிழகம் முழுவதும் இந்த முகாம்கள் 2 கட்டங்களாக நடத்தப்பட்டது.
அதன்படி முதற்கட்டத்தில் 20,765 ரேஷன் கடைகளில் உள்ள ரேஷன் அட்டைகளுக்கு ஜூலை 24 முதல் ஆகஸ்ட்.,4ம் தேதி வரை நடந்த விண்ணப்பப்பதிவு முகாமில் 88.34 லட்ச விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது.
அதேபோல் 2ம் கட்ட முகாம்கள் ஆகஸ்ட் 5ம் தேதி துவங்கி ஆகஸ்ட் 16ம் தேதி வரை நடத்தப்பட்டது.
இதில் 59.86 லட்ச விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன.
விண்ணப்பம்
அடுத்த 3 நாட்களுக்கு சிறப்பு முகாம்கள்
இந்நிலையில், இதுவரை மொத்தம் 1.48 கோடி விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளது என்று செய்திகள் தெரிவிக்கிறது.
இதனை தொடர்ந்து தற்போது இந்த கலைஞர் மகளிர் உரிமை தொகை திட்டத்திற்கு விண்ணப்பிக்க விடுபட்ட நபர்களுக்கு மீண்டும் ஓர் வாய்ப்பாக நாளை(ஆகஸ்ட்.,17) முதல் அடுத்த 3 நாட்களுக்கு சிறப்பு முகாம்கள் நடத்தப்படவுள்ளது என்று தமிழக அரசு அறிவித்துள்ளது.
எனவே, விண்ணப்பிக்க தகுதி பெற்ற விண்ணப்பதாரர்கள் இந்த வாய்ப்பினை பயன்படுத்தி கொண்டு அடுத்த 3 நாட்கள் நடக்கும் சிறப்பு முகாம்களின் சேவை மூலம் இந்த திட்டத்திற்கு விண்ணப்பித்து கொள்ளுமாறும் மாநில அரசு சார்பில் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.