உரிமம் பெற்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமே பூங்காக்களில் அனுமதி
சென்னை ஆயிரம் விளக்கு பகுதியில் உள்ள பொதுப் பூங்காவில் ஞாயிற்றுக்கிழமை இரண்டு ராட்வீலர் நாய்கள் தாக்கியதில் ஐந்து வயது சிறுமி படுகாயமடைந்தார். இந்நிலையில், சென்னை பூங்காக்களுக்குள் நாய்கள் நுழைவதற்கு சென்னை மாநகராட்சி கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. உரிமம் பெற்ற தடுப்பூசி செலுத்தப்பட்ட வளர்ப்பு நாய்களுக்கு மட்டுமே பூங்காக்களில் அனுமதி உண்டு என்று சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. மேலும், வளர்ப்பு நாய்களின் கழுத்தில் சங்கிலி அணிவித்து, அதன் வாயை மூடி தான் பூங்காக்களுக்குள் அழைத்து வர வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது. குழந்தைகள் விளையாடும் இடம் பூங்காக்கள் என்பதால் அவர்களுக்கு எந்த பாதிப்பும் ஏற்பட்டு விடாமல் இருக்க உந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இதற்காக ஒரு சுற்றறிக்கையை சென்னை மாநகராட்சி, பூங்காக்களின் கண்காணிப்பாளர்களுக்கு அனுப்பியுள்ளது.