Page Loader
ஆன்லைன் சூதாட்டம் - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 
ஆன்லைன் சூதாட்டம் - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு

ஆன்லைன் சூதாட்டம் - தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு 

எழுதியவர் Nivetha P
Apr 27, 2023
06:20 pm

செய்தி முன்னோட்டம்

ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தினை எதிர்த்து சென்னை உயர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட வழக்கின் விசாரணை இன்று(ஏப்ரல்.,27)நடந்தது. அப்போது ஆன்லைன் சூதாட்ட தடை சட்டத்தினை இயற்ற மாநில அரசுக்கு அதிகாரமில்லை என்று ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தரப்பு வாதத்தினை முன்வைத்தது. அப்போது ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிப்பதில் என்ன தவறு? என சென்னை உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். மேலும் பேசிய நீதிபதிகள், இந்த ஆன்லைன் சூதாட்ட விளையாட்டால் ஏற்படும் மரணங்களையும், அதன்மூலம் வாடும் அந்த குடும்பத்தின் வறுமையினை தடுக்கவுமே இந்த தடை சட்டம் கொண்டுவரப்பட்டது. மக்கள் நலன் தான் மிக முக்கியம். அப்படி இருக்கும் பட்சத்தில் மக்கள் நலனுக்காகவே இந்த சட்டத்தினை இயற்றியதாக மாநில அரசு கூறுகிறது என்று தங்கள் கருத்துக்களை தெரிவித்தனர்.

ஆன்லைன்

6 வாரங்களுக்குள் பதிலளிக்க வேண்டும் என உத்தரவு 

இதனை தொடர்ந்து எதிர்தரப்பு வாதங்களும் தொடர்ந்து நடத்தப்பட்டுள்ளது. பின்னர் இரு தரப்பு வாதங்களும் முடிந்த நிலையில், ஆன்லைன் விளையாட்டு நிறுவனங்கள் தாக்கல் செய்துள்ள வழக்குகளுக்கு அடுத்த 6 வாரங்களுக்குள் தமிழக அரசு பதில் அளிக்க வேண்டும் என்று சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவு பிறப்பித்துள்ளது. அதனையடுத்து இந்த வழக்கில் தமிழக அரசு பதிலளித்த பின்னரே இடைக்கால உத்தரவு விதிப்பது குறித்து முடிவு எடுக்கப்படும் என்றும் சென்னை உயர்நீதிமன்றம் திட்டவட்டமாக தனது கருத்தினை தெரிவித்துள்ளது. மேலும் இது தொடர்பான வழக்கின் விசாரணை வரும் ஜூலை மாதம் 3ம் தேதி நடக்கும் என்று கூறி ஒத்திவைக்கப்பட்டு உத்தரவு பிறப்பிக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.