NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / 'ஒரே நாடு ஒரே தேர்தல்': மோடி 3.0 வில் அமல்படுத்தப்படும் எனத்தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    'ஒரே நாடு ஒரே தேர்தல்': மோடி 3.0 வில் அமல்படுத்தப்படும் எனத்தகவல்
    "ஒரே நாடு, ஒரே தேர்தல்" என்பது மக்களவை மற்றும் சட்டமன்றங்களுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது

    'ஒரே நாடு ஒரே தேர்தல்': மோடி 3.0 வில் அமல்படுத்தப்படும் எனத்தகவல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Sep 16, 2024
    03:03 pm

    செய்தி முன்னோட்டம்

    "ஒரே நாடு, ஒரே தேர்தல்" என குறிப்பிடப்படும் மக்களவை மற்றும் சட்டமன்றங்களுக்கான தேர்தலை ஒரே நேரத்தில் நடத்துவது என்ற கருத்து, தற்போதைய நரேந்திர மோடி அரசாங்கத்தின் ஆட்சிக் காலத்திற்குள் செயல்படுத்தப்படும் என்று வட்டாரங்கள் தெரிவித்தன.

    தி ஹிந்து வெளியிட்ட செய்தியின்படி, 2011 ஆம் ஆண்டு முதல் மேற்கொள்ளப்படாத மக்கள் தொகை கணக்கெடுப்பு பணியும் விரைவில் தொடங்கும் என்று அரசு வட்டாரங்கள் தெரிவித்ததாக செய்தி வெளியிட்டுள்ளது.

    தற்போதைய மோடி அரசு பதவியேற்று 100 நாட்கள் நிறைவடையும் இந்த தருணத்தில் இந்த தேர்தல் முறையை நடைமுறைப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசு தீவிர ஆலோசனையில் இறங்கியுள்ளது.

    உறுதி

    மோடியின் உறுதி

    2014ல் ஆட்சிக்கு வந்த சில மாதங்களிலேயே பிரதமர் நரேந்திர மோடியால் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தப்படும் என்ற கருத்து முன்னிலைப்படுத்தப்பட்டது.

    இதற்காக முன்னாள் குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் தலைமையிலான குழுவும் அமைக்கப்பட்டு ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கான சாத்தியக்கூறுகளையும், சாதக பாதகங்களையும் ஆய்வு செய்தது.

    நாடாளுமன்றம் மற்றும் சட்டசபைகளுக்கு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்தவும், அதைத் தொடர்ந்து 100 நாட்களுக்குள் உள்ளாட்சி தேர்தல் நடத்தவும் பரிந்துரைத்தது.

    இந்த நிலையில் பிரதமர் மோடி தனது சுதந்திர தின உரையில் இந்த திட்டத்தின் மீது தனது அரசாங்கத்தின் உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்தினார்.

    மேலும் இந்த முடிவுக்கு பங்களிக்க அனைத்து அரசியல் கட்சிகளுக்கும் வேண்டுகோள் விடுத்தார்.

    சட்ட ஆணையம்

    சட்ட ஆணையத்தின் பரிந்துரை

    தனித்தனியாக, லோக்சபா, மாநில சட்டசபைகள் மற்றும் நகராட்சிகள் மற்றும் பஞ்சாயத்துகள் போன்ற உள்ளாட்சி அமைப்புகளுக்கு - 2029 முதல், மூன்று அடுக்கு அரசாங்கங்களுக்கும் ஒரே நேரத்தில் தேர்தலை நடத்தவும், தொங்கு பாராளுமன்றம் அல்லது நம்பிக்கையில்லா வழக்குகளில் ஒற்றுமை அரசாங்கத்திற்கான ஏற்பாடு செய்யவும் சட்ட ஆணையம் பரிந்துரைக்க வாய்ப்புள்ளது.

    எனினும் கோவிந்த் குழு ஒரே நேரத்தில் தேர்தல் நடத்துவதற்கான எந்த காலத்தையும் குறிப்பிடவில்லை.

    குழுவின் பரிந்துரைகளை நிறைவேற்றுவது குறித்து ஆராய்வதற்காக 'செயல்படுத்தும் குழு' ஒன்றை உருவாக்க முன்மொழிந்துள்ளது.

    குழு 18 அரசியலமைப்பு திருத்தங்களை பரிந்துரைத்தது, அவற்றில் பெரும்பாலானவை மாநில சட்டசபைகளின் ஒப்புதல் தேவைபடாதது.

    இருப்பினும், இதற்கு சில அரசியலமைப்பு திருத்த மசோதாக்கள் தேவைப்படும், அவை பாராளுமன்றத்தால் நிறைவேற்றப்பட வேண்டும்.

    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஒரே நாடு ஒரே தேர்தல்
    தேர்தல்
    மோடி
    நரேந்திர மோடி

    சமீபத்திய

    ஜப்பானின் சகுராஜிமா எரிமலை வெடித்து, 3 கிலோமீட்டர் உயரத்திற்கு சாம்பல் புகை; காணொளி ஜப்பான்
    மே 18இல் ரிசாட் 18 செயற்கைகோளை ஏவுகிறது இஸ்ரோ; தேசிய பாதுகாப்பில் கவனம் செலுத்துவதாக உறுதி இஸ்ரோ
    2025இல் இந்தியாவிற்கு சீனாவை விட இரண்டு மடங்கு எண்ணெய் தேவைப்படும்; OPEC கணிப்பு இந்தியா
    கதறிய தாயின் வேண்டுகோளை நிராகரித்த ஜெய்ஷ்-இ-முகமது பயங்கரவாதி; வேறு வழியின்று சுட்டு வீழ்த்திய இந்திய ராணுவம் ஜம்மு காஷ்மீர்

    ஒரே நாடு ஒரே தேர்தல்

    ஒரே நாடு, ஒரே தேர்தலுக்கு எதிராக தமிழக முதல்வர் ஸ்டாலின் கொண்டு வந்த தீர்மானம் தமிழக முதல்வர்
    ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான அறிக்கை குடியரசுத் தலைவரிடம் சமர்ப்பிப்பு திரௌபதி முர்மு

    தேர்தல்

    4-ஆம் கட்ட மக்களவை தேர்தல்: ஸ்ரீநகர் உட்பட 10 மாநிலங்களில் இன்று வாக்குப்பதிவு  பொதுத் தேர்தல் 2024
    அமேதி, ரேபரேலி உள்ளிட்ட 49 தொகுதிகளுக்கான ஐந்தாம் கட்ட வாக்குப்பதிவு தொடக்கம் பொதுத் தேர்தல் 2024
    வாக்குப்பதிவு இயந்திரத்தை உடைத்த ஜெகன் ரெட்டி கட்சி எம்எல்ஏ: தேர்தல் ஆணையம் கண்டனம்  ஆந்திரா
    தமிழக அமைச்சரவையில் மாற்றமா?உதயநிதிக்கு துணை முதலமைச்சர் பொறுப்பா? தமிழக அரசு

    மோடி

    மஹுவா மொய்த்ராவை தகுதி நீக்கம் செய்ய பரிந்துரை: ஓட்டெடுப்பில் நெறிமுறைகள் குழு ஏற்றது திரிணாமுல் காங்கிரஸ்
    "நான் கர்பா செய்யும் வீடியோவைப் பார்த்தேன், டீப்ஃபேக்குகள் மிகப்பெரிய அச்சுறுத்தல்": பிரதமர் மோடி பிரதமர் மோடி
    சென்னையில் புயல் பாதிப்புகளை ஆய்வு செய்த பின், முதல்வரை சந்தித்தார் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் சென்னை
    மஹுவா மொய்த்ரா தொடர்பான நெறிமுறைகள் குழு அறிக்கை நாடாளுமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது நாடாளுமன்றம்

    நரேந்திர மோடி

    சினிமாவில் மட்டுமல்ல, அரசியலிலும் கேப்டன்; விஜயகாந்துக்கு மோடி புகழஞ்சலி விஜயகாந்த்
    இந்தியாவை அவமதிக்கும் வகையில் பேசியதற்காக 3 அமைச்சர்களை இடைநீக்கம் செய்தது மாலத்தீவு அரசு பிரதமர்
    லட்சத்தீவு: மினிகாய் தீவில் புதிய விமான நிலையத்தை அமைக்க இந்தியா முடிவு  லட்சத்தீவு
    மலையாள நடிகர் சுரேஷ் கோபி மகளின் திருமணத்தில் கலந்து கொண்ட பிரதமர் மோடி; வைரலாகும் புகைப்படங்கள் மலையாள திரையுலகம்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025