Loading...
தொகுதி மறுவரையறை மசோதாவுக்குப் பின் மத்திய அரசின் அடுத்த இலக்கு 'ஒரே நாடு, ஒரே தேர்தல்': 2029-ல் அமலாகுமா?
தொகுதி மறுவரையறை மசோதாவுக்குப் பின் மத்திய அரசின் அடுத்த இலக்கு 'ஒரே நாடு, ஒரே தேர்தல்'

தொகுதி மறுவரையறை மசோதாவுக்குப் பின் மத்திய அரசின் அடுத்த இலக்கு 'ஒரே நாடு, ஒரே தேர்தல்': 2029-ல் அமலாகுமா?

எழுதியவர் Sekar Chinnappan
Nov 29, 2026
07:50 pm

செய்தி முன்னோட்டம்

நாடாளுமன்றத்தில் நாளை திருத்தப்பட்ட தொகுதி மறுவரையறை மசோதா தாக்கல் செய்யப்பட உள்ள நிலையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்ட உடனேயே மத்திய அரசின் அடுத்த மிகப்பெரிய இலக்காக ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் முதலிடத்தில் இருக்கும் என டெல்லி வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. வரும் 2029-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலுடன் நாடு முழுவதும் ஒரே நேரத்தில் சட்டப்பேரவைத் தேர்தல்களையும் நடத்தும் நோக்கில் மத்திய அரசு தீவிரமாகச் செயல்பட்டு வருகிறது. இதன் ஒரு பகுதியாக இந்த சிறப்புக் கூட்டத்தொடரிலேயே ஒரே நாடு ஒரே தேர்தல் தொடர்பான நாடாளுமன்ற கூட்டுக் குழுவின் அறிக்கையை அரசு தாக்கல் செய்யுமா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

தொகுதி மறுவரையறை ஆணையம்

புதிய தொகுதி மறுவரையறை ஆணையம் 2 ஆண்டுகளுக்குள் அறிக்கை தாக்கல் செய்யுமா என்ற கேள்வி

அதேசமயம் புதிய தொகுதி மறுவரையறை ஆணையம் அமைக்கப்பட்டால் இரண்டு ஆண்டுகளுக்குள் தனது பணிகளை முடித்து அறிக்கையை சமர்ப்பிக்க முடியுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.

சுதந்திரத்திற்குப் பிறகு 1952 1963 1973 மற்றும் 2002 ஆகிய ஆண்டுகளில் அமைக்கப்பட்ட ஆணையங்களில் நீதியரசர் குல்தீப் சிங் தலைமையிலான 2002 ஆணையம் தனது அறிக்கையைச் சமர்ப்பிக்க 5 ஆண்டுகள் எடுத்துக்கொண்டது.

எனினும் 2029 தேர்தலுக்குள் தொகுதி மறுவரையறை மற்றும் ஒரே நாடு ஒரே தேர்தல் ஆகிய இரண்டையும் இணைத்து செயல்படுத்த மத்திய அரசு முழுமையான முன்னேற்பாடுகளை செய்துள்ளதாகத் தகவல்கள் கூறுகின்றன.

எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டு

நீதிமன்றத்தில் கேள்வி கேட்க முடியாத அதிகாரமும் எதிர்க்கட்சிகள் முன்வைக்கும் குற்றச்சாட்டுகளும்

தொகுதி மறுவரையறை ஆணையத்தின் மிக முக்கியமான அம்சம் என்னவென்றால் அதன் அறிக்கையை நாட்டின் எந்தவொரு நீதிமன்றத்திலும் சவால் செய்ய முடியாது என்பதாகும்.

ஆணையத்தில் ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் சம்பந்தப்பட்ட மாநிலத் தேர்தல் ஆணையர் ஆகியோர் உறுப்பினர்களாக இருப்பார்கள்.

மேலும் ஒவ்வொரு மாநிலத்திலிருந்தும் 5 எம்பிக்கள் மற்றும் 5 எம்எல்ஏக்கள் இணை உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டாலும் அவர்களுக்கு வாக்களிக்கும் உரிமையோ அறிக்கையில் கையெழுத்திடும் அதிகாரமோ கிடையாது.

ADVERTISEMENT

ராகுல் காந்தி குற்றச்சாட்டு

ஆணையத்தை மத்திய அரசு முழுமையாகக் கட்டுப்படுத்தும் என ராகுல் காந்தி குற்றச்சாட்டு

இணை உறுப்பினர்களின் பங்கு வெறும் ஆலோசனை வழங்குவதோடு மட்டுமே முடிந்துவிடுவதால் ஆணையத்தின் மீது மத்திய அரசு முழுக் கட்டுப்பாட்டை வைத்திருக்கும் எனக் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறது.

மக்களவைத் தொகுதிகளின் புதிய எல்லைகளை மத்திய அரசு ஏற்கனவே தீர்மானித்துவிட்டதாகவும் அதனை ஆணையத்தின் மூலம் முறையாக அமல்படுத்த மட்டுமே போவதாகவும் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி பகிரங்கமாகக் குற்றம் சாட்டியுள்ளார்.

இதேபோல் 2022 ஜம்மு காஷ்மீர் மற்றும் 2023 அசாம் தொகுதி மறுவரையறை நடைமுறைகள் குறித்தும் எதிர்க்கட்சிகள் தொடர்ந்து கேள்வி எழுப்பி வருவது குறிப்பிடத்தக்கது.

ADVERTISEMENT