Page Loader
சென்னை ஐஐடி'யில் மேலுமொரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை
சென்னை ஐஐடி'யில் மேலுமொரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை

சென்னை ஐஐடி'யில் மேலுமொரு மாணவர் தூக்கிட்டு தற்கொலை

எழுதியவர் Nivetha P
Apr 21, 2023
07:52 pm

செய்தி முன்னோட்டம்

சென்னை கிண்டியில் உள்ள ஐஐடி கல்வி மையத்தில் 2ம் ஆண்டு பிடெக் படிப்பினை படித்து வந்தவர் கேதார் சுரேஷ். இவர் விடுதியில் தங்கி தனது படிப்பினை மேற்கொண்டு வந்த நிலையில், இன்று(ஏப்ரல்.,21) அவர் அறையில் தூக்குப்போட்டு கொண்டு இறந்துள்ளார். இந்த தகவல் காவல்துறைக்கு தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் கோட்டூர்புரம் காவல்துறையினர் விடுதி அறைக்கு சென்று மாணவரின் உடலினை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். மாணவரின் தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியவில்லை. இது குறித்து தற்போது கோட்டூர்புரம் காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து விசாரணையினை துவங்கியுள்ளார்கள் என்று தகவல்கள் தெரிவிக்கிறது.

கொலை 

சென்னை ஐஐடி'யில் தொடரும் தற்கொலைகள் 

இதே போல் அண்மையில் சென்னை ஐஐடி'யில் படித்து வந்த மேற்கு வங்காள மாநிலத்தினை சேர்ந்த பி.எச்.டி. மாணவர் சச்சின் குமார் ஜெயின்(வயது 32) என்பவர் வேளச்சேரியில் உள்ள தனது விடுதி அறையில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம் பெரும் பரபரப்பினை ஏற்படுத்தியது. மேலும் அதற்கு முன்னர் இதே ஐஐடி'யில் பயின்ற மாணவர்கள் பிப்ரவரி மாதம் மராட்டிய மாநிலத்தை சேர்ந்த ஆராய்ச்சி மாணவர் ஸ்டீபன் சன்னி என்பவரும், மார்ச் மாதம் ஆந்திராவை சேர்ந்த பி.டெக் மாணவர் வைபு புஷ்பக ஸ்ரீ சாய்(வயது 20) என்பவரும் தற்கொலை செய்து கொண்டது குறிப்பிடத்தக்கது.