Page Loader
ஓணம் திருநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் பேசி வீடியோ வெளியீடு
முதல்வர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் பேசி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார்.

ஓணம் திருநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் பேசி வீடியோ வெளியீடு

எழுதியவர் Sindhuja SM
Aug 29, 2023
09:48 am

செய்தி முன்னோட்டம்

ஓணம் பண்டிகை இன்று கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகிறது. கேரளாவின் மிக முக்கிய பண்டிகையான ஓணம், கேரளாவில் மட்டுமல்லாமல், தமிழகத்தின் சில பகுதிகளிலும் சிறப்பாக கொண்டாடப்படுகிறது. இதனையடுத்து, தமிழகத்தின் சென்னை, கன்னியாகுமரி மற்றும் நீலகிரி ஆகிய மாவட்டங்களுக்கு ஓணம் பண்டிகையை முன்னிட்டு இன்று உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், தற்போது தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் பேசி ஒரு வீடியோவை வெளியிட்டுள்ளார். அவரது ட்விட்டர் பதிவில், "பரஸ்பர அன்பும் நல்லிணக்கமும் கொண்ட தேசமாக அனைவரையும் சமமாக பார்ப்போம். நாடு முழுவதும் ஒற்றுமையும் , சமத்துவமும் மீண்டும் உண்டாக வாழ்த்துகள்" என்று மலையாளத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும், அவர், "என் பிரியப்பட்ட மலையாளிகளுக்கு எனது இருதயம் நிறைந்த ஓணம் வாழ்த்துகள்." என்றும் கூறியுள்ளார்.

ட்விட்டர் அஞ்சல்

முதல்வர் மு.க.ஸ்டாலினின் ட்விட்டர் பதிவு