ஓணம் பண்டிகையை முன்னிட்டு எர்ணாகுளத்திற்கு, பெங்களூரில் இருந்து சிறப்பு ரயில் இயக்கம்
அடுத்த வாரத்தில் ஓணம் பண்டிகை வருவதை ஒட்டி தென் மாநிலங்கள் பலவற்றிலிருந்தும் கேரளா மாநிலத்திற்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. ஏற்கனவே பண்டிகை நாள் கூட்டத்தினை கருத்தில் கொண்டு கொச்சுவேலி வீக்லி எக்ஸ்பிரஸ் (06083) ரயிலின் சேவைகள் நீடிக்கப்படுவதாக தெற்கு ரயில்வே அறிவித்திருந்தது. தற்போது, எர்ணாகுளம்-எலகங்கா சிறப்பு ரெயில் (வண்டி எண்: 06101) அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த ரயில் வருகிற 4 மற்றும் 6-ந்தேதிகளில் எர்ணாகுளத்தில் இருந்து மதியம் 12.40 மணிக்கு புறப்பட்டு, அன்றைய தினம இரவே 11 மணிக்கு பெங்களுருவில் உள்ள எலஹங்காவை வந்தடையும். மறுமார்க்கமாக எலஹங்காவிலிருந்து (06102) வருகிற 5, 7-ந்தேதிகளில் அதிகாலை 5 மணிக்கு புறப்பட்டு எர்ணாகுளத்தை மதியம் 2.20மணிக்கு வந்தடையும்.