
வேலை நிறுத்த போராட்டம் வாபஸ் - விடுவிக்கப்படாத ஆம்னி பேருந்துகள்
செய்தி முன்னோட்டம்
ஆயுத பூஜை பண்டிகையையொட்டி ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிக்கப்படுவதாக புகார்கள் எழுந்தது.
இப்புகார்களின் பேரில் தமிழகம் முழுவதும் 120 ஆம்னி பேருந்துகள் போக்குவரத்துறை அதிகாரிகளால் சிறைபிடிக்கப்பட்டது.
இதற்கு எதிர்ப்புத்தெரிவித்து நேற்று(அக்.,24)மாலை 6-மணிமுதல் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படாது என ஆம்னிப்பேருந்து உரிமையாளர்கள் கூட்டமைப்பு அறிக்கை வெளியிட்டது.
இதனால் மக்கள் கடும் அதிர்ச்சியடைந்தனர்.
இதனைத்தொடர்ந்து, சென்னை கே.கே.நகர் போக்குவரத்துத்துறை இணை ஆணையர் அலுவலகத்தில் இணை ஆணையர் முத்து தலைமையில் இதுகுறித்த பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.
அப்போது சிறைபிடிக்கப்பட்ட ஆம்னி பேருந்துகளை விடுவிக்க வேண்டும் உள்ளிட்ட சில கோரிக்கைகள் முன்வைக்கப்பட்டது.
இந்த கோரிக்கைகளை அதிகாரிகள் ஏற்றுக்கொண்டதால் போராட்டம் வாபஸ் பெறப்பட்டது.
ஆனால் தற்போதுவரை சிறைபிடிக்கப்பட்ட 120 பேருந்துகளில் ஒன்றுக்கூட விடுவிக்கப்படவில்லை என்று ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிர்ச்சியுற்றுள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
அதிர்ச்சி தகவல்
#BREAKING || விடுவிக்கப்படாத ஆம்னி பேருந்துகள்
— Thanthi TV (@ThanthiTV) October 25, 2023
கூடுதல் கட்டண வசூல் உள்ளிட்ட புகாரில் சிறைபிடிக்கப்பட்ட 120 ஆம்னி பேருந்துகளில் ஒன்று கூட விடுவிக்கப்படாததால் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் அதிர்ச்சி#omnibus #ThanthiTV pic.twitter.com/0qarIGnOw9