ஓம் பிர்லா vs கே சுரேஷ்: சபாநாயகர் பதவிக்கு, ஒருமித்த கருத்து எட்டப்படாததால் இரு அணிகளின் வேட்பாளர்கள் களமிறக்கம்
மக்களவை சபாநாயகர் பதவிக்கு ஆளும் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணியும், எதிர்க்கட்சிகளும் ஒருமித்த கருத்துக்கு ஒத்து வராததால் முதல் முறையாக சபாநாயகர் பதவிக்கு தேர்தல் நடைபெறவுள்ளது. NDA தனது வேட்பாளராக பாஜக எம்பி ஓம் பிர்லாவைத் தேர்ந்தெடுத்துள்ள நிலையில், மூத்த காங்கிரஸ் தலைவர் கே சுரேஷை எதிர்க்கட்சிகள் நிறுத்த முடிவு செய்துள்ளன. லோக்சபா சபாநாயகர் வேட்பாளர் குறித்து ஒருமித்த கருத்தை உருவாக்க பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் மற்றும் நாடாளுமன்ற விவகார அமைச்சர் கிரண் ரிஜிஜு ஆகியோரை அரசாங்கம் நியமித்திருந்தது குறிப்பிடத்தக்கது. சபாநாயகர் பற்றி ஒருமித்த கருத்துக்கு சாமந்தித்தால், துணை சபாநாயகர் எதிர்க்கட்சி அணியிலிருந்து தேர்வு செய்யப்பட வேண்டும் என எதிர்க்கட்சிகள் விடுத்திருந்த கோரிக்கைக்கு மத்திய அரசு பதிலளிக்கவில்லை.