
திருப்பூரில் கொரோனாவுக்கு முதியவர் ஒருவர் பலி - மேலும் ஓர் மரணம்
செய்தி முன்னோட்டம்
தமிழகத்தில் கணிசமாக கொரோனா பரவல் அதிகரித்து வருவதோடு, தற்போது பலி எண்ணிக்கையும் அதிகரிக்க துவங்கியுள்ளது.
அதன்படி, திருப்பூரில் 18 பேருக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆரம்ப சுகாதார மையங்களில் கொரோனா பரிசோதனை தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இந்நிலையில் வெள்ளக்கோவில் கே.பி.சி. பகுதியில் 82 வயது முதியவரான சுப்பிரமணி கடந்த சில நாட்களாக காய்ச்சல் ஏற்பட்டு அவதிப்பட்டுள்ளார்.
தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவருக்கு பின்னர் கொரோனா இருப்பது கண்டறியப்பட்டு சிகிச்சையளிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும் அவர் சிகிச்சை பலனின்றி இன்று(ஏப்ரல்.,4) உயிரிழந்தார்.
இவரது மனைவிக்கும் கொரோனா இருப்பது கண்டறியப்பட்ட நிலையில் அவர் தற்போது தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகிறார்.
இன்று தூத்துக்குடியிலும் ஒருவர் கொரோனா தொற்று ஏற்பட்டு இறந்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
திருப்பூரில் கொரோனாவுக்கு முதியவர் ஒருவர் பலி - மேலும் ஓர் மரணம்
#BREAKING திருப்பூர் கொரோனாவுக்கு முதியவர் மரணம்#Tiruppur #Covid #News18TamilNadu https://t.co/7dpn9FD15R pic.twitter.com/F4mgWG4kcE
— News18 Tamil Nadu (@News18TamilNadu) April 4, 2023