Page Loader
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவிற்கு ஒருவர் பலி
தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவிற்கு ஒருவர் பலி

தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கொரோனாவிற்கு ஒருவர் பலி

எழுதியவர் Nivetha P
Apr 04, 2023
01:22 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியா முழுவதும் கட்டுக்குள் இருந்த கொரோனா தற்போது மீண்டும் பரவி வருகிறது. குறிப்பாக தமிழகத்தில் இதன் பாதிப்பு கணிசமாக அதிகரித்து வரும் நிலையில், முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த பார்த்திபன்(55) என்பவர் கொரோனா பாதிப்பு காரணமாக தூத்துக்குடி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனையில் கடந்த 23ம் தேதி சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார். புற்றுநோய் பாதிப்புள்ள இவர் கொரோனா தொற்று ஏற்பட்டு சிகிச்சைப்பெற்று வந்த நிலையில், இன்று(ஏப்ரல்.,4) உயிரிழந்துள்ளார் என்று மருத்துவர்கள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. உயிரிழந்த பார்த்திபன் புற்றுநோய் காரணமாக இறந்தார் என்றும் கூறலாம். கொரோனா தொற்று காரணமாக இறந்தார் என்றும் கூறலாம் என்று அம்மருத்துவமனை டீன் சிவகுமார் கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

தூத்துக்குடி மாவட்டத்தில் கொரோனாவிற்கு ஒருவர் பலி