ஒடிசா ரயில் விபத்து: உடல்கள் வைக்கப்பட்டிருந்த பள்ளி இடிக்கப்பட்டது
செய்தி முன்னோட்டம்
ஒடிசா ரயில் விபத்தில் உயிரிழந்தவர்களின் உடல்கள் வைக்கப்பட்டு தற்காலிக பிணவறையாக மாற்றப்பட்ட பஹானாகா உயர்நிலைப் பள்ளி கட்டிடம் இடிக்கப்பட்டது.
பள்ளி மாணவர்கள் தங்கள் வகுப்புகளுக்குள் செல்ல பயந்ததை அடுத்து இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே, பலியானவர்களின் உடல்கள் புவனேஸ்வருக்கு மாற்றப்பட்டு, பள்ளி வளாகத்தை சுத்தப்படுத்திவிட்டனர். எனினும், மாணவர்கள் மற்றும் பெற்றோர்கள் மத்தியில் இது குறித்து பீதி ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும், "புதிய கட்டிடம் கட்டி முடிக்கப்பட்டதும், குழந்தைகள் பயப்படாமல் இருக்க ஒரு பூசாரி அந்த இடத்தை புனிதப்படுத்துவார்" என்று பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர் ராஜாராம் மொகபத்ரா கூறியுள்ளார்.
DETAISL
தீர்மானம் நிறைவேற்றப்பட்டு பள்ளி இடிக்கப்பட்டது
நேற்று, பாலசோர் மாவட்ட ஆட்சியர் தத்தாத்ராயா பௌசாஹேப் ஷிண்டே இந்த பள்ளிக்கு வருகை தந்திருந்தார்.
"பள்ளி நிர்வாகக் குழு உறுப்பினர்கள், தலைமையாசிரியர், பிற ஊழியர்கள் மற்றும் உள்ளூர் மக்களைச் சந்தித்தேன். அவர்கள் பழைய கட்டிடத்தை இடித்து அதை புதுப்பிக்க விரும்புகிறார்கள். இதனால் குழந்தைகள் மத்தியில் வகுப்புகளுக்கு செல்ல பயம் இருக்காது." என்று பள்ளியை பார்வையிட்ட பின் மாவட்ட ஆட்சியர் ஷிண்டே தெரிவித்திருந்தார்.
பள்ளியை இடிப்பதற்கான கோரிக்கையை எஸ்எம்சி நிறைவேற்ற வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் கேட்டுக்கொண்டதையடுத்து இதற்கான தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இந்நிலையில், பஹானாகா உயர்நிலைப் பள்ளி கட்டிடம் இன்று இடிக்கப்பட்டது.