
பில்கிஸ் பானோ கூட்டு பலாத்கார வழக்கின் 11 குற்றவாளிகள் 2 வாரங்களில் சரணடைய உத்தரவு
செய்தி முன்னோட்டம்
2002-ம் ஆண்டு குஜராத் கலவரத்தின் போது பில்கிஸ் பானோ என்பவரை பாலியல் பலாத்காரம் செய்யப்பட்டார். அவரது குடும்ப உறுப்பினர்கள் 7 பேர் கொலை செய்யப்பட்டனர்.
2002 குஜராத் கோத்ரா ரயில் எரிப்பு சம்பவத்திற்குப் பிறகு வெடித்த கலவரத்தில் இருந்து தப்பிச் செல்லும் போது பில்கிஸ் பானோ பலாத்காரம் செய்யப்பட்டார். அப்போது அவர் 21 வயது கர்ப்பிணியாக இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
அந்த கலவரத்தின் போது கொல்லப்பட்ட ஏழு குடும்ப உறுப்பினர்களில் அவரது மூன்று வயது மகளும் ஒருவர் ஆவார்.
இந்த வழக்கின் 11 குற்றாவளிகளுக்கு மரணதண்டனை வழங்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், கடந்த 2019இல் ராதிஷ்யம் பகவான்தாஸ் ஷா என்ற குற்றவாளி தனக்கு முன்கூட்டியே விடுதலை அளிக்க வேண்டும் என்று குஜராத் நீதிமன்றத்தில் மனு அளித்தார்.
வ்க்ஜ்ஜன்
பலாத்கார குற்றவாளிகளை விடுவித்த குஜராத் அரசு
அதை குஜராத் நீதிமன்றம் நிராகரித்தவுடன், அவர் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார்.
அப்போது அவரது ரிட் மனுவை ஏற்றுக்கொண்ட உச்ச நீதிமன்றம், இது குறித்து குஜராத் அரசு முடிவெடுக்க வேண்டும் என்று உத்தரவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
அதனையடுத்து, வழக்கற்றுப் போன சட்டத்தின் அடிப்படையில் குற்றவாளிகளை 2022 சுதந்திர தினத்தன்று குஜராத் அரசு விடுதலை செய்தது.
ஆளும் பாஜகவுடன் தொடர்புடையவர்கள் அடங்கிய குழுவிடம் ஆலோசனை நடத்திய பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டது.
அப்போது, அந்த குற்றவாளிகளை "ஒழுக்கம் மிக்க பிராமணர்கள்" என்று கூறிய அந்த பாஜக குழு, அவர்களுக்கு பெரும் வரவேற்பை அளித்தது.
குற்றவாளிகளுக்கு வீர வரவேற்பு அளிக்கப்பட்டதுடன், பாஜக எம்.பி மற்றும் எம்.எல்.ஏக்களுடன் அவர்கள் பல முக்கிய நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
ட்ஜ்வ்ன் லம்
குற்றவாளிகள் 2 வாரங்களுக்குள் சரணடைய உத்தரவு
இந்நிலையில், குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதற்கு எதிராக பில்கிஸ் பானோ உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார்.
அந்த மனுவை இன்று விசாரித்த நீதிமன்றம், குற்றவாளிகளை விடுவிக்க குஜராத் அரசுக்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளது.
மேலும், குற்றவாளிகளில் ஒருவர் மோசடி வழிகளில் உண்மைக்கு புறம்பான பொய்யான ஆதரங்களை சமர்ப்பித்திருக்கிறார் என்று இன்று தெரிவித்த உச்ச நீதிமன்ற நீதிபதிகள், 2022 மே மாதம் வழங்கப்பட்ட தீர்ப்பை ரத்து செய்தனர்.
"குற்றவாளிகளின் மனுவை பரிசீலிக்க குஜராத் அரசுக்கு இந்த நீதிமன்றம் எந்த உத்தரவையும் பிறப்பிக்கவில்லை. இது ஒரு ஏமாற்று வேலை..." என்றும் உச்ச நீதிமன்றம் கூறியுள்ளது.
மேலும், விடுவிக்கப்பட்ட குற்றவாளிகள் 2 வாரங்களுக்குள் சரணடைய வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.