இனி பிறப்பு சான்றிதழ்களும் அடையாள ஆவணமாக அங்கீகரிக்கப்படும்: மத்திய அரசு
பிறப்பு சான்றிதழ்களை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் என்கிற புதிய மசோதாவிற்கு, கடந்த நாடாளுமன்ற கூட்டத்தொடரில் ஒப்புதல் தரப்பட்டது. இந்த மசோதாவின் தொடர்ச்சியாக மாற்றியமைக்கப்பட்ட பிறப்பு மற்றும் இறப்பு (திருத்தம்) சட்டம், 2023, வரும் அக்டோபர் 1 முதல் நடைமுறைக்கு வரும் என்று அதிகாரப்பூர்வ அறிக்கை தற்போது வெளியிடப்பட்டுள்ளது. அந்த சட்டத்தின் மூலம், அக்டோபர் 1 முதல், வாக்காளர் அடையாள அட்டை பெறவதற்கும், ஓட்டுநர் உரிமம் பெறுவதற்கும் என தொடங்கி, கல்வி நிறுவனத்தில் சேருதல், ஆதார் எண், திருமணப் பதிவு மற்றும் அரசுப் பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு பணிகளுக்கு ஒரே அடையாள ஆவணமாகப் பயன்படுத்தலாம். இதனால் மக்கள் பல அடையாள அட்டைகளை சமர்ப்பிக்க தேவை இல்லை என நிம்மதி அடைந்துள்ளனர்.
பிறப்பு மற்றும் இறப்பு (திருத்தம்) சட்டம்
பிறப்பு சான்றிதழை அடையாள ஆவணமாக பயன்படுத்தலாம் - மத்திய அரசு அறிவிப்பு..!#BirthCertificate #Centralgovt #dailythanthi pic.twitter.com/sKEjb5aqHn— DailyThanthi (@dinathanthi) September 14, 2023