Page Loader
அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை: நடிகர் சுரேஷ் கோபி விளக்கம் 

அமைச்சர் பதவியை ராஜினாமா செய்யப் போவதில்லை: நடிகர் சுரேஷ் கோபி விளக்கம் 

எழுதியவர் Sindhuja SM
Jun 10, 2024
04:31 pm

செய்தி முன்னோட்டம்

பாஜக தலைமையில் நேற்று இணை அமைச்சராக பதவியேற்று கொண்ட மலையாள நடிகர் சுரேஷ் கோபி, தனக்கு அந்த பதவி வேண்டாம் என்று இன்று கூறியதாக செய்திகள் வெளியாகின. இந்நிலையில், அதற்கு விளக்கம் அளித்துள்ள நடிகர் சுரேஷ் கோபி, தான் பதவி விலக போவதில்லை என்றும், அது குறித்து வெளியான செய்திகள் அனைத்தும் வதந்தீ என்றும் கூறியுள்ளார். "மோடி அரசின் அமைச்சர்கள் குழுவில் இருந்து நான் விலகப் போவதாக சில ஊடகங்கள் தவறான செய்திகளை பரப்பி வருகின்றன. இது முற்றிலும் தவறானது. பிரதமர் நரேந்திர மோடி ஜி தலைமையில், கேரளாவின் வளர்ச்சி மற்றும் செழிப்புக்கு நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்." என்று நடிகர் சுரேஷ் கோபி ட்விட்டரில் கூறியுள்ளார்.

இந்தியா 

இணை அமைச்சராக நேற்று பதவியேற்ற சுரேஷ் கோபி

இந்தியாவின் மக்களவை தேர்தல் சமீபத்தில் நடந்தது, அந்த தேர்தலில் பாஜக பெரும்பான்மையை பெறவில்லை என்றாலும், பிற கூட்டணி கட்சிகளின் உதவியோடு அக்கட்சி ஆட்சி அமைத்தது. பிரதமர் மோடி மூன்றாவது முறையாக நாட்டின் பிரதமராக பதவியேற்று கொண்டார். நேற்று இதற்காக நடத்தப்பட்ட பதவியேற்பு விழாவில் பிரதமர் மோடியை தவிர, பல பாஜக மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் அமைச்சர்களாகவும், இணை அமைச்சர்களாகவும் பதிவியேறினார். நேற்று நடந்த பதவியேற்பு விழாவில், மலையாள நடிகரும் பாஜக எம்பியுமான சுரேஷ் கோபியும் இணை அமைச்சராக பதவியேற்றார். அவர் கேரளாவின் திருச்சூரில், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பி.எஸ் சுனில் குமாருக்கு எதிராக போட்டியிட்டு கணிசமான வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றார்.

ட்விட்டர் அஞ்சல்

நடிகர் சுரேஷ் கோபி ட்விட்டரில் விளக்கம்