Page Loader
காரில் சடலமாக கிடந்த வடமாநில இளைஞர் - காவல்துறை விசாரணை 
காரில் சடலமாக கிடந்த வடமாநில இளைஞர் - காவல்துறை விசாரணை

காரில் சடலமாக கிடந்த வடமாநில இளைஞர் - காவல்துறை விசாரணை 

எழுதியவர் Nivetha P
Apr 21, 2023
07:56 pm

செய்தி முன்னோட்டம்

சென்னையை அடுத்த குன்றத்தூர் அருகே காரின் ட்ரைவர் சீட்டில் சீட் பெல்ட் அணிந்த நிலையில் இளைஞர் ஒருவர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார் என்னும் பரபரப்பு செய்தி ஒன்று வெளியாகி அதிர்ச்சியினை ஏற்படுத்தியுள்ளது. குன்றத்தூர் நத்தம் பகுதியை சேர்ந்த கோபிநாத் என்பவரது வீட்டின் அருகில் நிறுத்தப்பட்டிருந்த காரில் பார்க்கிங் விளக்கு மட்டும் எரிந்த வண்ணம் இருந்துள்ளது. இதனை கண்டு சந்தேகமடைந்த கோபிநாத் காரினை போர்த்தியிருந்த கவரினை எடுத்து பார்த்துள்ளார். அப்போது ட்ரைவர் சீட்டில் சடலமாக ஒருவர் உள்ளது தெரியவந்துள்ளது. அப்பகுதி மக்கள் இதனை கண்ட நிலையில் பதற்றம் அடைந்துள்ளார்கள்.

கார்

சடலமாக மீட்கப்பட்டவர் உடல் காருக்குள் எப்படி வந்தது?

இதனை தொடர்ந்து கோபிநாத் அப்பகுதி காவல்துறைக்கு தகவல் அளித்துள்ளார் என்று செய்திகள் தெரிவிக்கிறது. கோபிநாத் அளித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு காவல்துறையினர் வந்து காரின் உள்ளே கிடந்த சடலத்தினை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். அந்த சடலத்தை பார்க்கையில் 30 வயதுடைய நபர் போல் தெரிகிறது என்று காவல்துறை தரப்பில் கூறப்படுகிறது. மேலும் இது குறித்து காவல்துறை நடத்திய முதற்கட்ட விசாரணையில் சடலமாக கிடந்தவர் வடமாநிலத்தினை சேர்ந்தவர் என்று தகவல்கள் தெரிவிக்கிறது. தற்போது அந்த இளைஞரின் உடல் போர்த்தப்பட்ட காருக்குள் எப்படி சென்றது? அவர் கொலை செய்யப்பட்டாரா? என்னும் கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது குறிப்பிடத்தக்கது.