இனி மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு கிடையாது - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி
செய்தி முன்னோட்டம்
ஈரோடு மாவட்டத்தினை சேர்ந்த அரசு பள்ளி ஆசிரியை ஒருவர் தனது 3வது பேறுகாலத்திற்கு விடுப்பு கோரியுள்ளார்.
ஆனால் அவரது கோரிக்கை நிராகரிக்கப்பட்டுள்ளது.
இதனை எதிர்த்து அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
இதன் விசாரணை இன்று(ஆகஸ்ட்.,28)நடந்தநிலையில், மனுதாரர் தரப்பில், பணியில் சேருவதற்கு முன்னர் 2 குழந்தைகளை பெற்றெடுத்த ஆசிரியையின் கணவர் உயிரிழந்த நிலையில் மறுமணம் செய்துகொண்ட ஆசிரியை மீண்டும் கருவுற்று கடந்தாண்டு இரட்டை குழந்தைகளை பெற்றெடுத்துள்ளார்.
இதற்காக அவர் விண்ணப்பித்த பேறுகால விடுப்பு நிராகரிக்கப்பட்டது தவறு என்று வாதிடப்பட்டது.
இதனை கேட்ட சென்னை உயர் நீதிமன்றம் நீதிபதி என்.சதீஷ்குமார், 2 குழந்தைகளுக்கான பிரசவத்திற்கு மட்டுமே பேறுகால விடுப்பு என்னும் அரசின் கொள்கையினை மாற்றமுடியாது என்று கூறி வழக்கினை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
சென்னை உயர்நீதிமன்ற தீர்ப்பு
#JUSTIN | மூன்றாவது பிரசவத்திற்கு பேறுகால விடுப்பு வழங்கக் கோரிய அரசு ஆசிரியையின் மனுவை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது
— Sun News (@sunnewstamil) August 28, 2023
அரசுப் பணியில் சேருவதற்கு முன்பு திருமணமாகி 2 குழந்தைகள் பெற்ற நிலையில், கணவர் இறந்து மறுமணம் செய்த பின்னர் கருவுற்றதால் பேறுகால விடுப்பு கோரிய ஈரோடைச்…