வாடகை வீட்டிற்கு அட்வான்ஸ் கொடுக்க முடியாததால் நூதன விளம்பரம் - வைரலாகும் போஸ்டர்
கர்நாடக மாநிலம், பெங்களூரில் போஸ்டர் ஒன்று தற்போது வைரலாகி வருகிறது. அந்த போஸ்டரில் தனது இடது சிறுநீரகம் விற்பனைக்கு உள்ளது என்று எழுதப்பட்டுள்ளது. மேலும் அந்த போஸ்டரில் நில உரிமையாளர்கள் கேட்கும் அட்வான்ஸ் பணத்தினை கொடுக்க தேவையுள்ளது என்றும், விளம்பரதாரரின் சுயவிவரத்தை அணுக நில உரிமையாளர்கள் ஸ்கேன் செய்ய கூடிய க்யூஆர் குறியீடு ஆகியவையும் அந்த போஸ்டரில் இடம்பெற்றுள்ளது. அந்த போஸ்டரினை முழுமையாக படித்த பின்னர் தான் தெரிகிறது அது நிஜத்தில் கிட்னி விற்பனைக்கு அளிக்கப்பட்ட விளம்பரம் உண்மையானது அல்ல என்று. நகைச்சுவைக்காக இந்த போஸ்டர் போடப்பட்டுள்ளது.
பெங்களூரில் வாடகை வீடு தேடியவரின் நிலையை உணர்த்தும் போஸ்டர்
அதிகளவில் வாடகை வாங்குவதையும், அட்வான்ஸ் கேட்பதையும் கிண்டல் செய்து, அந்த வீட்டு உரிமையாளர்களை நக்கல் செய்வதற்காகவும் தான் இந்த விளம்பர போஸ்டர் ஒட்டப்பட்டுள்ளது. பெங்களூரில் உள்ள இந்திரா நகரில் ஒருவர் வாடைகைக்கு வீடு தேடி வந்த நிலையில் அதிகளவில் அட்வான்ஸ் தொகையினை அந்த வீட்டு உரிமையாளர்கள் கேட்ட நிலையில், அதற்கு ஒரே வழி கிட்னியை விற்பது தான் என்பதை உணர்த்தும் வகையில் இந்த போஸ்டர் அமைக்கப்பட்டுள்ளது. இதனை ரம்யாக் ஜெயின் என்பவர் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்துள்ளார். இந்த போஸ்டர் தற்போது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது.