குட் நியூஸ்: மின் கட்டணம் உயர்த்தப்படாது என மின்சார வாரியம் அறிவிப்பு
கடந்த இரு தினங்களாக தமிழ்நாட்டில் மின்சார கட்டணம் உயரப்போவதாக தகவல் வைரலாகிக்கொண்டிருந்தது. மக்களை அதிர்ச்சியில் ஆழ்த்திய அந்த செய்திக்கு தற்போது தமிழ்நாடு மின்சார வாரியம் முற்றுப்புள்ளி வைத்துள்ளது. ஜூலை முதல் மின்கட்டணம் உயர்த்தப்படுவதாக தகவல் பரவிய நிலையில், மின் கட்டணத்தில் எந்த மாற்றமும் இல்லை என தற்போது மின்சார வாரியம் விளக்கம் அளித்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம், வீடுகள் மற்றும் தொழிற்சாலைகள் இரண்டிற்குமான மின்சார கட்டணம் 12% -15% வரை உயர்த்தப்பட்டது. அதோடு, மின்சார ஒழுங்கு முறை வாரியம், ஆண்டுதோறும், மின்சார கட்டணத்தை முறைப்படுத்தவும் அனுமதி அளித்துள்ளதால், தற்போது நிலவி வரும் பணவீக்கத்தையும் கருத்தில் கொண்டு, மின்சார கட்டணம் உயரும் என செய்திகள் வெளியான நிலையில், தற்போது மின்சார வாரியம் அதை மறுத்துள்ளது.