Page Loader
இளங்கலை நீட் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம்- தேசிய மருத்துவ ஆணையம் தகவல்
இந்தியாவில் இளங்கலை பல் மற்றும் மருத்துவ படிப்புகளுக்கான நுழைவுத் தேர்வாக நீட் தேர்வு உள்ளது.

இளங்கலை நீட் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம்- தேசிய மருத்துவ ஆணையம் தகவல்

எழுதியவர் Srinath r
Oct 07, 2023
04:34 pm

செய்தி முன்னோட்டம்

அடுத்த ஆண்டு முதல் இளங்கலை நீட் தேர்வுக்கான பாடத்திட்டத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக தேசிய மருத்துவ ஆணையம்(என்எம்சி) தகவல் தெரிவித்துள்ளது. தேசிய தேர்வு முகமையால் நடத்தப்படும் நீட் தேர்வுக்கான பாடத்திட்டத்தை என்எம்சியின், இளங்கலை மருத்துவ கல்வி வாரியம் தற்போது இறுதிசெய்துள்ளது. இது தொடர்பாக என்எம்சி அறிக்கை வெளியிட்டுள்ளது. அந்த அறிக்கையில் நீட் தேர்விற்கான பாடத்திட்டம் அடுத்த ஆண்டு(2024) முதல் மாற்றப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் மாற்றப்பட்ட பாடத்திட்டம் அதன் வலைதளத்தில் வெளியிடப்பட்டுள்ளதாக அதில் கூறப்பட்டுள்ளது. வரவிருக்கும் (2024-2025) கல்வி ஆண்டுக்கான நீட் தேர்வுக்கு தயாராகும் மாணவர்கள் புதுப்பிக்கப்பட்ட பாடத்திட்டத்தை பார்க்க அந்த அறிக்கையில் அறிவுறுத்தப்பட்டுள்ளது. முன்னதாக அடுத்த ஆண்டு இளங்கலை நீட் தேர்வு மே 5ல் நடைபெறும் என தேசிய தேர்வு முகமை அறிவித்திருந்தது.

ட்விட்டர் அஞ்சல்

நீட் தேர்விற்கான பாடத்திட்டத்தில் மாற்றம்