NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil

    இந்தியா உலகம் வணிகம் விளையாட்டு தொழில்நுட்பம் பொழுதுபோக்கு ஆட்டோ வாழ்க்கை காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
     
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / கேரளாவிற்கு நிபா வைரஸ் எச்சரிக்கை: 2 பேர் 'இயற்கைக்கு மாறான' முறையில் பலி 
    கேரளாவிற்கு நிபா வைரஸ் எச்சரிக்கை: 2 பேர் 'இயற்கைக்கு மாறான' முறையில் பலி 
    இந்தியா

    கேரளாவிற்கு நிபா வைரஸ் எச்சரிக்கை: 2 பேர் 'இயற்கைக்கு மாறான' முறையில் பலி 

    எழுதியவர் Sindhuja SM
    September 12, 2023 | 09:41 am 1 நிமிட வாசிப்பு
    கேரளாவிற்கு நிபா வைரஸ் எச்சரிக்கை: 2 பேர் 'இயற்கைக்கு மாறான' முறையில் பலி 
    நிபா வைரஸ் தொற்று என்பது விலங்குகள் வழியாக மனிதர்களுக்கு பரவும் ஒரு ஜூனோடிக் நோயாகும்.

    கேரளா: கோழிக்கோடு மாவட்டத்தில் "இயற்கைக்கு மாறான" முறையில் உயிரிழந்த இருவர் நிபா வைரஸ்(NiV) நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கப்படுகிறது. இதனையடுத்து, நேற்று இரவு கேரள சுகாதாரத் துறை கேரளாவுக்கு சுகாதார எச்சரிக்கை விடுத்தது. "இயற்கைக்கு மாறான" முறையில் உயிரிழந்தவர்களுள் ஒருவரின் உறவினர்களும் தீவிர சிகிச்சை பிரிவில்(ICU) அனுமதிக்கப்பட்டுள்ளனர். உயிரிழந்த இருவருமே கோழிக்கோடு மாவட்டத்தில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்ததாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதற்கிடையில், நேற்று, அம்மாநில சுகாதாரத்துறை அமைச்சர் ஒரு உயர்மட்டக் கூட்டத்தை நடத்தி கோழிக்கோடு மாவட்டத்தின் நிலைமையை ஆய்வு செய்தார். தென்னிந்தியாவில் முதல்முறையாக 2018இல் நிபா வைரஸ் தொற்றுநோய் கோழிக்கோடு மற்றும் மலப்புரம் மாவட்டங்களில் பதிவாகியது. அதன் பின்னர், 2021இல் மீண்டும் அதே மாவட்டங்களில் நிபா பெருந்தொற்று பதிவாகியது.

    நிபா வைரஸ் தொற்று குறித்து தெரிந்து கொள்ள வேண்டியவை

    நிபா வைரஸ் தொற்று என்பது விலங்குகள் வழியாக மனிதர்களுக்கு பரவும் ஒரு ஜூனோடிக் நோயாகும். இந்த நோய் பழ வெளவால்களால் ஏற்படுகிறது. மேலும் இது அசுத்தமான உணவுகள் மூலமாகவோ அல்லது பாதிக்கப்பட்ட மனிதர்கள் மூலமாகவோ பரவுகிறது . இந்த வைரஸ் பன்றிகள் போன்ற விலங்குகளுக்கும் கடுமையான நோயை ஏற்படுத்தக்கூடும். சுவாச நோய், அபாயகரமான மூளையழற்சி, இருமல், தொண்டை வலி, தலைச்சுற்றல், தூக்கம், தசை வலி, சோர்வு, தலைவலி, மன குழப்பம் மற்றும் வலிப்புத்தாக்கங்கள் போன்றவை இந்த நோயின் அறிகுறிகளாகும். இந்த வைரஸுக்கு உறுதியான சிகிச்சை எதுவும் இல்லை என்றாலும், தரையில் விழுந்த பழங்களை சாப்பிடுவதைத் தவிர்ப்பது, பன்றிகளுக்கு உணவளிப்பதைத் தவிர்ப்பது மற்றும் பழ வெளவால்களை விலக்கி வைப்பது போன்ற முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை எடுக்கலாம்.

    இந்த காலவரிசையைப் பகிரவும்
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    கேரளா
    இந்தியா

    கேரளா

    இந்தியாவின் மிக நீளமான கண்ணாடி பாலம் - கேரளாவில் திறப்பு சுற்றுலா
    'INDIA' Vs பாஜக: 6 மாநிலங்களில் இன்று இடைத்தேர்தல் வாக்குப்பதிவு  இந்தியா
    ஓணம் திருநாள்: முதல்வர் மு.க.ஸ்டாலின் மலையாளத்தில் பேசி வீடியோ வெளியீடு தமிழ்நாடு
    சென்னைக்கு நாளை உள்ளூர் விடுமுறை - மாவட்ட ஆட்சியர் ஓணம்

    இந்தியா

    சனாதன விவகாரம்: பாஜக மாநில தலைவர் அண்ணாமலை பேட்டி  அண்ணாமலை
    Ind vs Pak ஆசிய கோப்பை: தனது 112வது அரைசதத்தை அடித்து சாதனை புரிந்தார் விராட் கோலி ஆசிய கோப்பை
    கனடாவில் நடந்த இந்தியாவுக்கு எதிரான காலிஸ்தான் வாக்கெடுப்பு நிகழ்ச்சியால் பதட்டம்  கனடா
    ஜி20 மாநாடு - உலக தலைவர்களை அசரவைத்த தமிழகத்தினை சேர்ந்த தவில் வித்வான் ஜனாதிபதி
    அடுத்த செய்திக் கட்டுரை

    இந்தியா செய்திகளை விரும்புகிறீர்களா?

    புதுப்பித்த நிலையில் இருக்க குழுசேரவும்.

    India Thumbnail
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2023