Page Loader
லக்பீர் சிங் சந்துவைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 15 லட்சம் பரிசுத்தொகை
கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி NIA இவர் மீது வழக்குப் பதிவு செய்தது.

லக்பீர் சிங் சந்துவைப் பற்றி தகவல் அளிப்பவர்களுக்கு 15 லட்சம் பரிசுத்தொகை

எழுதியவர் Sindhuja SM
Feb 16, 2023
04:20 pm

செய்தி முன்னோட்டம்

பஞ்சாபில் தீவிரவாதம் தொடர்பான வழக்கில் தேடப்பட்டு வரும் கனடாவைச் சேர்ந்த லக்பீர் சிங் சந்து (எ) லண்டாவுவை கண்டுபிடிப்பவர்களுக்கு 15 லட்சம் ரூபாய் பரிசுத்தொகை வழங்கப்படும் என்று தேசிய புலனாய்வு அமைப்பு(NIA ) அறிவித்துள்ளது. பஞ்சாப் மாநிலம் டர்ன் தரான் மாவட்டத்தில் உள்ள ஹரிகே கிராமத்தில் வசித்து வந்த லாண்டா, தற்போது கனடாவின் ஆல்பர்ட்டாவில் உள்ள எட்மண்டனில் பதுங்கி உள்ளார். பஞ்சாபில் பல தீவிரவாத செயல்களிலும், பாகிஸ்தானில் இருந்து ஆயுத கடத்தல்களிலும் ஈடுபட்டிருந்த லாண்டாவைப் பற்றிய தகவல்களை யார் பகிர்ந்து கொண்டாலும் அவர்களுக்கு ரொக்க வெகுமதி வழங்கப்படும் என்றும் ​​தகவல் அளிப்பவரின் அடையாளங்கள் ரகசியமாக வைக்கப்படும் என்றும் NIA தெரிவித்துள்ளது.

இந்தியா

காலிஸ்தானி பயங்கரவாத கும்பல்களுக்கு எதிரான நடவடிக்கை

நாட்டின் பல்வேறு பகுதிகளில் சட்டவிரோத நடவடிக்கைகளில் ஈடுபட்டதற்காக லாண்டா மீது இந்திய தண்டனைச் சட்டம் (ஐபிசி) பிரிவு 120பி, 121, 121 ஏ மற்றும் சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டம், 1967 (யுஏபிஏ) பிரிவு 17, 18, 18-பி மற்றும் 38 ஆகியவற்றின் கீழ் கடந்த ஆண்டு ஆகஸ்ட் 20ஆம் தேதி NIA வழக்குப் பதிவு செய்தது. ஒரு மாதத்திற்கு முன், குடியரசு தினத்தையொட்டி, பஞ்சாபிலிருந்த லாண்டாவின் கூட்டாளிகள் என்று கூறப்படும் இருவரை டெல்லி போலீசார் கைது செய்தனர். இவர்களது பெயர், ராஜன் பாட்டி மற்றும் கன்வால்ஜீத் சிங் என அடையாளம் காணப்பட்டுள்ளது. காலிஸ்தானி பயங்கரவாத-குண்டர்களுக்கு எதிராக நடந்து வரும் நடவடிக்கைகளில், போலீசார் இவர்களைக் கைது செய்துள்ளனர்.