
உணவு பாதுகாப்பு துறையின் புதிய நடைமுறை-ஆண்டுதோறும் உரிமத்தை புதுப்பிக்கணும்
செய்தி முன்னோட்டம்
மத்திய அரசின் உணவு பாதுகாப்பு துரையின் கீழ், ஐந்தாண்டுகள் வரை 'உரிமம்' வழங்கிய நிலையில் தற்போது அதில் மாற்றம் செய்யப்பட்டு அறிவிப்பு வெளியாகியுள்ளது.
உணவு தானியம், மாவினை அரைப்பது போன்ற எந்தவகையில் உணவு தயார் செய்பவர்களும், உணவு பொருளை வாங்கி பேக்கிங் செய்து விற்பவர்களும் இனி ஆண்டுதோறும் 'உரிமத்தை' புதுப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆண்டுக்கு 12 லட்சம் மேல் வருமானம் ஈடுபவர்கள் நிச்சயம் தக்க உரிமத்தை எடுக்க வேண்டும்.
அதற்கு குறைவான வருமானம் இருந்தால் ஆண்டுக்கு ரூ.100 செலுத்தி பதிவு சான்றிதழை பெற முடியும்.
முன்னதாக, உரிமம் பெற ஆண்டுக்கு ரூ.2000 வீதம் 5 ஆண்டுகளுக்கு ரூ.10,000 வரை செலுத்தி பெற்று கொள்ளலாம் என்ற விதிமுறை தற்போது மாற்றப்பட்டுள்ளது.
உயர்நீதிமன்ற மதுரை கிளை
தக்க உரிமம் இல்லாமல் வியாபாரம் செய்தால் 6 மாத சிறை, ரூ.1 லட்சம் அபராதம்
அதன்படி, 2023ம்ஆண்டின் புதிய நடைமுறைப்படி, இனி ஆண்டுதோறும் உரிமத்தை புதுப்பிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், ஜனவரி 11ம்தேதிக்கு முன்னர் ஐந்தாண்டுகளுக்கான உரிமத்தை பெற்றிருந்தால், புதுசாக விண்ணப்பிக்க வேண்டியதில்லை என்றும் கூறப்பட்டுள்ளது.
3 முதல் 5ஆண்டுகளுக்கு எடுக்கப்பட்ட உரிமம் காலாவதியாகும் பட்சத்தில், புதுசாக விண்ணப்பித்துக்கொள்ளலாம் என உணவு பாதுகாப்பு துறை தெரிவித்துள்ளது.
தொடர்ந்து, பதிவுசான்றிதழ் அல்லது உரிமம் இல்லாமல் வியாபாரம் செய்தால் 6மாத சிறை, 1லட்சம் அபராதம் விதிக்கப்படும் என உயர்நீதிமன்ற மதுரை கிளையும் அறிவித்துள்ளது.
இதனைதொடர்ந்து பேக்கிங் செய்யும் லேபிளில் தயாரிக்குமிடம், முகவரி, தொலைபேசி எண், உற்பத்தி மற்றும் காலாவதி தேதி உள்ளிட்ட 16வகையான தகவல்கள் இருக்க வேண்டும்.
அப்படி இல்லையெனில் ரூ.2லட்சம் வரை அபராதம் விதிக்கப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.