வாக்கு ஒப்புகை சீட்டு கருவியின் புதிய அம்சம் அறிமுகம்
இந்தியா வாக்கு ஒப்புகைச்சீட்டு கருவியில் புதிய அம்சம் ஒன்றினை தேர்தல் ஆணையம் ஏற்படுத்தியுள்ளது. பொதுவாக இந்த வாக்கு ஒப்புகைச்சீட்டு முறையின்மூலம் வாக்காளர்கள் தங்கள் வாக்களித்த விவரங்களை தெரிந்துக்கொள்ளலாம். வாக்காளர்கள் வாக்களித்த பின்னர், விவிப்பேட்டில் வாக்கின் விவரம் தெரியும். அதன்படி வேட்பாளரின் பெயர், அவரின் சின்னம் உள்ளிட்ட இரண்டும், 7 வினாடிகளுக்கு விவிபேட் திரையில் தெரியும். அதன்பின்னரே இது வாக்கு ஒப்புகை சீட்டாக அச்சிடபட்டு இயந்திரத்தில் உள்ள பெட்டிக்குள் விழும். இந்த சீட்டுகள் உள்ள பெட்டிகளை, தேர்தல் அதிகாரிகளால் மட்டுமே திறக்கமுடியும் என்பது குறிப்பிடவேண்டியவை. இந்நிலையில், தற்போது ஏற்படுத்தப்பட்டுள்ள புதிய அம்சத்தின்மூலம், விவிபிஏடிகளின் முதற்கட்ட சோதனையில் வேட்பாளரின் பெயர், வரிசைஎண் மற்றும் சின்னம் உள்ளிட்டவை தொலைக்காட்சி அல்லது கணினி திரைகளிலும் காணப்படும்.
தங்கள் வாக்கு பதிவுகளை உறுதி செய்துகொள்ள உதவும்
அதன்படி, அதன் விவரங்களை சம்மந்தப்பட்டவர்கள் சரிபார்க்க உதவும் என்று கூறப்படுகிறது. இந்த அம்சமானது, விவிபேட் கருவிகளில் உள்ள வேட்பாளர்கள் பெயர்கள், சின்னங்கள் உள்ளிட்டவைகள் பதிவேற்றம் செய்யும் உள்ளீட்டு பாகத்தில் சேர்க்கப்பட்டுள்ளது என்று மத்திய சட்ட அமைச்சகம் தான் வெளியிடும் ஆண்டிற்கான அறிக்கையில் தெரிவித்துள்ளது. தொடர்ந்து, வாக்கு அளிக்கும் போது விவிபிஏடிகளில் தெரியும் வாக்கு ஒப்புகை சீட்டில் யாருக்கு வாக்களித்துள்ளோம் என்பது தெரியும். எனவே இந்த முறைப்படி, தாங்கள் வாக்களித்த வேட்பாளருக்கு தான், தங்கள் வாக்கு பதிவாகியுள்ளதா என்பதை உறுதி செய்து கொள்ளலாம் என்பது குறிப்பிடத்தக்கது.