Page Loader
NEFT, RTGS, IMPS.. எந்தப் பணப்பரிவர்த்தனை முறை சிறந்தது?
எந்த வங்கிப் பணப்பரிவர்த்தனை முறையைப் பயன்படுத்துவது?

NEFT, RTGS, IMPS.. எந்தப் பணப்பரிவர்த்தனை முறை சிறந்தது?

எழுதியவர் Prasanna Venkatesh
Jun 17, 2023
07:26 am

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் வங்கியின் மூலம் பரிவர்த்தனை செய்வதற்கு பல்வேறு விதமான பரிவர்த்தனை முறைகள் பயன்பாட்டில் இருக்கின்றன. NEFT, RTGS மற்றும் IMPS ஆகிய மூன்று பரிவர்த்தனை முறைகள் பிரதானமாகப் பயன்பாட்டில் இருக்கின்றன. இந்த பரிவர்த்தனை முறைகளுக்கு இடையேயான வித்தியாசம் என்ன? பார்க்கலாம். NEFT (National Electronic Fund Transfer): இந்த முறையின் கீழ் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டு வகையிலும் பணப்பரிவர்த்தனை செய்து கொள்ள முடியும். குறைபட்சம் 1 ரூபாயில் இருந்து அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் இந்த முறையின் கீழ் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். வங்கி மூலம் முறையை பயன்படுத்த, நாம் பரிவர்த்தனை செய்யும் தொகைக்கு ஏற்ப கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டும். ஆன்லைன் மூலமாக பயன்படுத்தினால் எந்தக் கட்டணமும் இல்லை.

இந்தியா

RTGS (Real Time Gross Settlement): 

இந்த முறையின் கீழும் ஆன்லைன் மற்றும் ஆஃப்லைன் என இரண்டு வகையிலும் பணப்பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். குறைந்தபட்சம் ரூ.2 லட்சத்தில் இருந்து அதிகபட்சம் எவ்வளவு வேண்டுமானாலும் பரிவர்த்தனை செய்து கொள்ளலாம். நிகழ்நேரத்தில் பணப்பரிமாற்றம் நிகழும் இந்த முறையில், ஆன்லைன் மூலம் பயன்படுத்த கட்டணம் ஏதும் இல்லை. வங்கி மூலம் பரிவர்த்தனை செய்தால் கூடுதல் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும். IMPS (Immediate Payment Service): இந்த முறையில் ஆன்லைன் மூலம் மட்டுமே பணப்பரிவர்த்தனை செய்ய முடியும். அதிகபட்சமாக ரூ.2 லட்சம் ரூபாய் வரையிலான பணப்பரிமாற்றத்தை நிகழ்நேரத்தில் செய்ய முடியும். வங்கி விடுமுறை நாட்களிலும் இந்த முறையை பயன்படுத்திக் கொள்ள முடியும். ஆனால், அனைத்து பரிவர்த்தனைகளுக்கும் சேவைக் கட்டணம் செலுத்த வேண்டியிருக்கும்.