LOADING...
ரத்தான நீட் தேர்விற்கு புதிய தேதி அறிவிப்பு: ஜூன் 21-ல் மறுதேர்வு
NEET UG தேர்விற்கு புதிய தேதி அறிவிப்பு

ரத்தான நீட் தேர்விற்கு புதிய தேதி அறிவிப்பு: ஜூன் 21-ல் மறுதேர்வு

எழுதியவர் Venkatalakshmi V
May 15, 2026
09:57 am

செய்தி முன்னோட்டம்

மருத்துவப் படிப்பிற்கான நீட் (NEET UG 2026) நுழைவுத் தேர்வு வினாத்தாள் கசிவு புகார்கள் காரணமாக ரத்து செய்யப்பட்ட நிலையில், அதற்கான மறுதேர்வு ஜூன் 21-ம் தேதி நடைபெறும் என்று தேசிய தேர்வு முகமை (NTA) இன்று அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது. கடந்த மே 3-ம் தேதி நாடு முழுவதும் நடைபெற்ற நீட் தேர்வில் முறைகேடுகள் மற்றும் வினாத்தாள் கசிவு ஏற்பட்டதாகப் புகார்கள் எழுந்தன. இதனைத் தொடர்ந்து, மாணவர்களின் நலன் கருதி அந்தத் தேர்வை ரத்து செய்வதாக மத்திய அரசு கடந்த செவ்வாயன்று அறிவித்தது. தற்போது இந்தத் தேர்விற்கான மாற்றுத் தேதியை NTA வெளியிட்டுள்ளது. அதன்படி, ஜூன் 21, 2026 (ஞாயிற்றுக்கிழமை) அன்று மறுதேர்வு நடைபெறும்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

கசிவு

தொடரும் போராட்டங்கள்

வினாத்தாள் கசிவு விவகாரம் நாடு முழுவதும் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. சென்னையில் நேற்று இந்திய மாணவர் சங்கத்தினர் (SFI) நீட் தேர்வை முற்றிலும் ரத்து செய்யக் கோரியும், தேசிய தேர்வு முகமையைக் கலைக்கக் கோரியும் தீவிரப் போராட்டத்தில் ஈடுபட்டனர். தேர்வு முறைகளில் உள்ள குளறுபடிகளுக்குத் தீர்வு காண வேண்டும் எனப் பல்வேறு தரப்பிலிருந்தும் கோரிக்கைகள் எழுந்துள்ளன. மறுதேர்வுக்கான ஹால் டிக்கெட் மற்றும் தேர்வு மையங்கள் குறித்த விவரங்கள் விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும். குறுகிய காலமே அவகாசம் இருப்பதால், மாணவர்கள் மீண்டும் தேர்வுக்குத் தயாராக வேண்டிய சூழல் ஏற்பட்டுள்ளது. முறைகேடுகள் இன்றித் தேர்வை நடத்த அனைத்து பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டுள்ளதாக NTA உறுதி அளித்துள்ளது.

Advertisement