
ஆகஸ்ட் 11: நீட் முறைகேடுகளுக்கு நடுவே, NEET PG 2024 தேதி அறிவிக்கப்பட்டுள்ளது
செய்தி முன்னோட்டம்
நாடு முழுவதும் நீட் தேர்வில் நடைபெற்ற முறைகேடுகள் பற்றியும், நீட் தேர்வு ரத்து குறித்து மாநில அரசுகள் தீர்மானத்தை நிறைவேற்றி வரும் நிலையில், முதுகலை (NEET PG) 2024 தேர்வுக்கான புதிய தேதியை மருத்துவ அறிவியலுக்கான தேசிய தேர்வு வாரியம் (NBEMS) அறிவித்துள்ளது.
இந்த ஆண்டு, தேர்வு ஆகஸ்ட் 11, 2024 அன்று இரண்டு ஷிப்டுகளாக நடைபெற உள்ளது.
விண்ணப்பதாரர்கள் மேலும் புதுப்பிப்புகள் மற்றும் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ இணையதளம் அதாவது natboard.edu.in ஐ சென்று பார்க்குமாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னதாக, NEET PG 2024 முதலில் ஜூன் 23 அன்று நடத்த திட்டமிடப்பட்டது.
ஆனால் நீட் UG இல் ஏற்பட்ட குளறுபடி காரணமாக முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக சுகாதார அமைச்சகம் அதை ஒத்திவைத்தது.
ட்விட்டர் அஞ்சல்
NEET PG 2024
NEET PG 2024 will be conducted on 11th August in two shifts#NEETPG2024 #NEETPG pic.twitter.com/oULO9VUFxp
— Annu Kaushik (@AnnuKaushik253) July 5, 2024