நீட் எம்டிஎஸ் நுழைவுத் தேர்வுக்கான கட்-ஆஃப் மதிப்பெண்கள் குறைப்பு; கூடுதல் மருத்துவர்களுக்கு வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
மத்திய சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் முதுநிலை பல் அறுவை சிகிச்சை படிப்பிற்கான தேசிய தகுதி மற்றும் நுழைவுத் தேர்வுக்கான (நீட் எம்டிஎஸ்) கட்-ஆஃப் மதிப்பெண்களை திருத்தியுள்ளது.
கட்-ஆஃப் மதிப்பெண்களின் திருத்தத்திற்குப் பிறகு, நீட் எம்டிஎஸ்ஸிற்கான தகுதி சதவீதம் ஒவ்வொரு பிரிவிற்கும் 21.692 குறைந்துள்ளது.
சுகாதாரம் மற்றும் குடும்ப நல அமைச்சகம் இது குறித்து வெளியிட்டுள்ள அறிக்கையில், "டிசிஐ'யின் எம்டிஎஸ் ஒழுங்குமுறைகள், 2017 மற்றும் டிசிஐ'யின் பல் அறுவை சிகிச்சையின் முதுகலை (1வது திருத்தம்) விதிமுறைகள், 2018இன் பிரிவு 7(1)இல் உள்ள 2வது விதியின்படி நீட்-எம்டிஎஸ், 2024க்கான தகுதி கட்-ஆஃப் சதவீதத்தை ஒவ்வொரு பிரிவினருக்கும் (பொது, எஸ்சி/எஸ்டி/ஓபிசி மற்றும் யுஆர்-பிடபிள்யூடி) 21.692 ஆக குறைக்க அமைச்சகம் முடிவு செய்துள்ளது." எனத் தெரிவித்துள்ளது.
கட்-ஆஃப் விபரங்கள்
வகுப்புவாரியாக கட்-ஆஃப் மதிப்பெண் விபரங்கள்
இந்த மாற்றத்தின்படி நீட் எம்டிஎஸ் பொதுப் பிரிவிற்கான (யுஆர்/இடபிள்யூஎஸ்) தகுதி சதவீதம் 28.308 ஆகும். அதே சமயம் எஸ்சி/எஸ்டி/ஓபிசி மற்றும் இந்த வகுப்புகளின் யுஆர்-பிடபிள்யூடி உட்பட தகுதி சதவீதம் 18.308 ஆகும்.
யுஆர்-பிடபிள்யூடிக்கான தகுதி சதவீதம் 23.308 ஆகும். முன்னதாக, நீட் எம்டிஎஸ் தேர்வு மார்ச் 18, 2024 அன்று நடத்தப்பட்டு, முடிவுகள் ஏப்ரல் 3, 2024 அன்று அறிவிக்கப்பட்டன.
மருத்துவர்களின் கூற்றுப்படி, கட் ஆஃப் குறைக்கும் முடிவு காலியாக உள்ள இடங்களை நிரப்பவும், மேலும் தகுதியான மருத்துவர்கள் தங்கள் கனவுகளைத் தொடர அனுமதிக்கவும் உதவும்.
நீட் எம்டிஎஸ் என்பது இளநிலை பல் மருத்துவர்கள் பல்வேறு எம்டிஎஸ் படிப்புகளில் சேருவதற்கான ஒற்றை நுழைவுத் தேர்வாக பரிந்துரைக்கப்படும் தகுதி மற்றும் தரவரிசைத் தேர்வாகும்.
embed
கட்-ஆஃப் குறைப்பு முடிவிற்கு மருத்துவர்கள் வரவேற்பு
We are grateful to the @MoHFW_INDIA for acknowledging concerns & reducing the #NEETMDS2024 qualifying marks. This decision will help fill vacant seats & allow more deserving candidates to pursue their dreams.@udfaindia @ANI @PTI_News @EduMinOfIndia @Xpress_edex @TOIIndiaNews pic.twitter.com/Nck0ebIMGj— UNITED DOCTORS FRONT ASSOCIATION (@udfaindia) September 17, 2024