'தேர்வின் புனிதத்தன்மை பாதிக்கப்பட்டுவிட்டது': நீட் தேர்வை ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரித்தது உச்ச நீதிமன்றம்
செய்தி முன்னோட்டம்
தேசிய நுழைவு மற்றும் தகுதித் தேர்வு(NEET-UG) 2024-ஐ ரத்து செய்யக் கோரிய மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், தேசிய தேர்வு முகமைக்கு(NTA) இன்று நோட்டீஸ் அனுப்பியுள்ளது.
இது குறித்து NTA பதிலளிக்க வேண்டும் என்று கூறிய நீதிபதிகள் விக்ரம் நாத் மற்றும் அஹ்சானுதீன் அமானுல்லா ஆகியோர் அடங்கிய விடுமுறை கால பெஞ்ச், இந்த வழக்கை ஜூலை 8 ஆம் தேதிக்கு ஒத்திவைத்தது.
"இது ஒரு சாதாரண விஷயம் இல்லை, தேர்வுகள் புனிதமானது. தற்போது புனிதம் அந்த பாதிக்கப்பட்டுள்ளது, எனவே எங்களுக்கு பதில்கள் தேவை" என்று தேசிய தேர்வு முகமை சார்பில் ஆஜரான வழக்கறிஞரிடம் நீதிபதி அமானுல்லா கூறினார்.
இந்தியா
NEET-UG 2024இன் கேள்வி தாள் கசிந்ததாக குற்றச்சாட்டு
இந்த வழக்கு விசாரணைக்காக ஆஜராகி இருந்த NTA வழக்கறிஞர் ஜே.சாய் தீபக், "பல மனுக்கள் கோர்ட்டில் பட்டியலிடப்பட்டுள்ளன. சில மனுக்கள் நீட் தேர்வு கேள்வி தாள் கசிவதற்கு முன்பே தாக்கல் செய்யப்பட்டவையாகும். அவை முடிவுகள் அறிவிக்கப்படுவதற்கு முன் தாக்கல் செய்யப்பட்டன. அந்த மனுக்கள் தொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது" என்று கூறியுள்ளார்.
ஆனால், இந்த மனுக்களை விசாரித்த உச்ச நீதிமன்றம், எம்பிபிஎஸ், பிடிஎஸ் மற்றும் பிற படிப்புகளில் வெற்றி பெற்றவர்களுக்கான கவுன்சிலிங் செயல்முறைக்கு தடை விதிக்க நீதிமன்றம் மறுத்துவிட்டது.
NEET-UG 2024இன் கேள்வி தாள் கசிந்ததாக அந்த மனுக்களில் கூறப்பட்டுள்ளன.
நியாயமான முறையில் தேர்வு எழுதும் மாணவர்களுக்கு இது பாதகம் ஏற்படுத்தியதால், இது அரசியல் சாசனத்தின் 14வது பிரிவை(சமத்துவத்திற்கான உரிமை) மீறுவதாக கூறப்பட்டுள்ளது.