"என்னை கொல்ல பார்த்தது காவல்துறை": விடுதலையானதும் சாட்டை துரைமுருகன் கூறிய முதல் வார்த்தை
செய்தி முன்னோட்டம்
நடைபெற்ற விக்கிரவாண்டி சட்டசபை இடைத்தேர்தல் பிரச்சாரத்தின் போது முன்னாள் முதல்வர் கருணாநிதி குறித்து அவதூறாக பேசியதற்காக நாம் தமிழர் கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் சாட்டை துரைமுருகன் நேற்று காலை தென்காசியில் வைத்து கைது செய்யப்பட்டார்.
அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டம் உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
எனினும், அவரை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி மறுத்ததால், நேற்று இரவே அவர் விடுவிக்கப்பட்டார்.
விடுவிக்கப்பட்டதும் செய்தியாளர்களிடம் பேசிய சட்டை முருகன், "காவல்துறையினர் என்னை மதுரை நோக்கி அழைத்து வரும்போது திட்டமிட்டு கொலை செய்யப்பார்த்தனர். ஆளும் அரசால் எனது உயிருக்கு ஆபத்து உள்ளது. எனக்கு பாதுகாப்பு வேண்டும்" எனக்கூறினார்.
இது கட்சியினர் இடையே பெரும் பதட்டத்தை ஏற்படுத்தியுள்ளது
ட்விட்டர் அஞ்சல்
சாட்டை துரைமுருகன் குற்றச்சாட்டு
"போலீஸ் அழைத்து வரும் போது மதுரை டோல்கெட் அருகே கொல்ல சதி" - ரிலீசான பின் சாட்டை பகீர் தகவல்#Tenkasi | #sattaiduraimurugan pic.twitter.com/xc2xeDl1tf
— Thanthi TV (@ThanthiTV) July 12, 2024