ஜெயலலிதாவை விட என் தாயாரும் மனைவியும் பலம் கொண்டவர்கள் - பா.ஜ.க. தலைவர் அண்ணாமலை
கோவையில் நேற்றைய தினம் சர்வேதச மகளிர்தினத்தை முன்னிட்டு சாதனை மகளிர் சங்கமம் நிகழ்ச்சியில் தமிழக பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். அப்போது செய்தியாளர்களை சந்தித்த அவர், நான் கலைஞர், ஜெயலலிதா உள்ளிட்ட யாருடனும் என்னை ஒப்பிடவில்லை. சிலக்கட்சிகளில் மேனேஜர்கள் உள்ளார்கள், சிலக்கட்சிகளில் தலைவர்கள் உள்ளார்கள். நான் ஜெயலலிதா அம்மையார் எடுத்த மாதிரியான முடிவுகளை எடுப்பேன் என உவமையில் அவ்வாறு கூறினேன் என்று பேசியுள்ளார். இதனைதொடர்ந்து, என்னை பொருத்தவரை என் தாய் ஜெயலலிதா அம்மையாரை விட 100மடங்கு பவர்புல். என் மனைவி அவரை விட 1000மடங்கு பவர்புல் என்று கூறியுள்ளார். இதனைதொடர்ந்து அவர், பாஜக'வை அதிமுக'வுடன் ஒப்பிட்டு பேசாதீர்கள் என்றும், தினமும் ஆயிரக்கணக்கானோர் வெவ்வேறு கட்சிகளில் இருந்து பாஜகவில் இணைகிறார்கள் என்றும் கூறியுள்ளார்.
2024ம் ஆண்டு தேர்தல் மோடிஜிக்கான தேர்தல் - அண்ணாமலை
தொடர்ந்து பேசிய அவர், பாஜகவில் இருந்து 2, 3ம் தரப்பு நிர்வாகிகள் கட்சியில் இருந்து நீங்கி செல்கிறார்கள். இன்னும் 6 மாதங்களில் பெரிய பெரிய தலைகள் பாஜகவில் இருந்து செல்ல வாய்ப்புள்ளது. அதே போல, மற்ற கட்சிகளில் இருந்தும் பெரிய பெரிய தலைகள் வந்து இணைய வாய்ப்புள்ளது. 4 பேர் சென்றால், 40 பேர் வருவார்கள் என்று பேசியுள்ளார். மேலும், 2024ம் ஆண்டு தேர்தல் மோடிஜிக்கான தேர்தல், அது தங்களுக்கான தேர்தல் என்பதில் உறுதியாக உள்ளதாக அவர் கூறியுள்ளார். தமிழ்நாட்டில் அவதூறு நோட்டீஸ் கொடுக்காமல் அரசியல் நடத்தும் ஒரே நபர் தாம் தான் என்றும் அவர் குறிப்பிட்டு பேசியது குறிப்பிடத்தக்கது.