Page Loader
ஐயப்ப பக்தர்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கி அன்னதானமிட்ட இஸ்லாமியர்கள் 
ஐயப்ப பக்தர்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கி அன்னதானமிட்ட இஸ்லாமியர்கள்

ஐயப்ப பக்தர்களுக்கு பூஜை பொருட்கள் வழங்கி அன்னதானமிட்ட இஸ்லாமியர்கள் 

எழுதியவர் Nivetha P
Dec 28, 2023
07:40 pm

செய்தி முன்னோட்டம்

இந்தியாவில் ஆங்காங்கே மதம் சார்ந்த பிரச்சனைகள் அடிக்கடி நடந்து வருகிறது என்று செய்திகள் வெளியான வண்ணம் உள்ளது. இதற்கு தீர்வுக்காண மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறார்கள். இதற்கிடையே, ஒருசில மதத்தை சேர்ந்த மக்கள் ஒன்றிணைந்து மற்றொரு மதத்தை சேர்ந்த மக்களோடு இணைந்து மத நல்லிணக்கத்தினை ஏற்படுத்தும் முயற்சியில் தாமாகவே முன்வந்து ஈடுபடுகிறார்கள். இது போன்ற நிகழ்வுகளும் ஒரு பக்கம் நடந்து கொண்டு தான் உள்ளது. குறிப்பாக தமிழ்நாடு மாநிலத்தில் இது போன்ற நிகழ்வுகள் அவ்வப்போது நடப்பதாக கூறப்படுகிறது. அதன்படி, இந்து கோயில்களில் நடைபெறும் திருவிழாக்களுக்கு இஸ்லாமியர்கள் பேனர் அடிப்பது, இந்துக்கள் கோயில் கமிட்டியில் இஸ்லாம் மதத்தை சேர்ந்தோர் பொறுப்பில் உள்ளது போன்ற நிகழ்வுகள் இதற்கு சான்றாக பார்க்கப்படுகிறது.

மதம் 

கடந்த 8 ஆண்டுகளாக நடந்து வரும் நிகழ்வு 

மேலும், பண்டிகை காலங்களில் சாதி-மதம் என அனைத்தையும் கடந்து எல்லோரும் ஒன்றாக அமர்ந்து உணவுப்பரிமாறி உண்ணும் சம்பவங்களும் தமிழ்நாட்டில் அடிக்கடி நடப்பதும் வழக்கம். அந்த வகையில் கிருஷ்ணகிரியில் ஆண்டுதோறும் மதநல்லிணக்கத்தினை போற்றும் வகையில் இஸ்லாமிய இளைஞர்கள் ஒன்றிணைந்து ஒவ்வொரு ஆண்டும் பிள்ளையார் சதுர்த்தி கொண்டாடுகிறார்கள், சபரிமலைக்கு செல்லும் ஐயப்ப பக்தர்களுக்கு பூஜைப்பொருட்கள் வாங்கி கொடுப்பதோடு, அன்னதானமும் செய்து வருகின்றனர். சுமார் 8 ஆண்டுகளாக இந்த இளைஞர்கள் இதனை செய்து வரும் நிலையில், 9ம்-ஆண்டான இந்தாண்டும் இவர்கள் ஐயப்ப பக்தர்களுக்கு பூஜைப்பொருட்கள் வாங்கி கொடுத்துள்ளனர். திமுக பொதுக்குழு உறுப்பினர் மற்றும் முன்னாள் கவுன்சிலரான அஸ்லாம் தலைமையில் கிருஷ்ணகிரியை அடுத்துள்ள கொட்டாவூர் கிராம ஐயப்பன் கோயிலில் நேற்று(டிச.,27)மாலை சிறப்பு பஜனை நடத்தப்பட்டு பூஜைப்பொருட்கள் வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.

ட்விட்டர் அஞ்சல்

சிறப்பு பூஜை