உத்தர பிரதேசம்: ஹோலி கொண்டாட்டம் என்ற பெயரில் இஸ்லாமிய குடும்பத்தை நடு தெருவில் வைத்து அவமானப்படுத்தும் வீடியோ வைரல்
உத்தரபிரதேச மாநிலம் பிஜ்னூரை சேர்ந்த ஒரு முஸ்லீம் குடும்பத்தின் மீது வண்ணம் பூசி அவர்களை அவமானப்படுத்திய அடையாளம் தெரியாத சிலரை போலீசார் தேடி வருகின்றனர். ஒரு தெரு வழியாக மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்த ஒரு முஸ்லீம் குடும்பத்தின் மீது சிலர் வலுக்கட்டாயமாக வண்ணங்களைப் பூசி தண்ணீரை ஊற்றுவதை காட்டும் வீடியோ ஒன்று சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. அந்த வீடியோவில் உள்ள ஆண்கள் "ஜெய் ஸ்ரீ ராம்" என்ற கோஷங்களை எழுப்புவதையும் நம்மால் காண முடிகிறது. இந்த சம்பவம் மார்ச் 20 புதன்கிழமை அன்று பிஜ்னூர் நகரின் தாம்பூர் பகுதியில் நடந்தது. அப்பகுதியின் வட்ட அதிகாரி(CO) பாதிக்கப்பட்ட குடும்பத்தை அணுகி முதல் தகவல் அறிக்கையை(எஃப்ஐஆர்) பதிவு செய்யுமாறு உத்தரவிடப்பட்டுள்ளது