
அயோத்தியில் மசூதி கட்டுவதற்கான தேதியை அறிவித்தது இஸ்லாமிய அறக்கட்டளை
செய்தி முன்னோட்டம்
இந்த ஆண்டு மே மாதம் முதல் அயோத்தியில் பிரமாண்டமான மசூதி கட்டும் பணி தொடங்கப்படும் என்று இந்தோ-இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளையின் மூத்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
அயோத்தி மசூதியின் கட்டுமானம் முடிய மூன்று அல்லது நான்கு ஆண்டுகள் ஆகலாம்.
அயோத்தி ராமர் கோவில் கும்பாபிஷேக விழா இன்று நடைபெற்று கொண்டிருக்கும் நிலையில், இந்த தகவல் வெளியாகியுள்ளது.
அயோத்தி மசூதி திட்டத்தை மேற்பார்வையிடும் இந்தோ-இஸ்லாமிக் கலாச்சார அறக்கட்டளையின் (IICF) மேம்பாட்டுக் குழுதலைவர் ஹாஜி அர்பத் ஷேக் இந்தத் தகவலைத் தெரிவித்தார்.
திட்டமிட்டபடி மசூதி கட்டுவதற்கான நிதியை வசூலிக்க, நன்கொடை வழங்கும் இணையதளம் அமைக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.
டப்க
2019இல் உச்ச நீதிமன்றத்தால் வழங்கப்ட்ட தீர்ப்பு
நபிகள் நாயகத்தின் நினைவாக அந்த மசூதிக்கு "மஸ்ஜித் முஹம்மது பின் அப்துல்லா" என்று பெயரிடப்பட உள்ளது.
"எங்களின் இந்த முயற்சி மக்களிடையே உள்ள பகை, வெறுப்பு ஆகியவற்றை அன்பாக மாற்றும். நம் குழந்தைகளுக்கும் மக்களுக்கும் நல்ல விஷயங்களைக் கற்றுக் கொடுத்தால் இந்தச் சண்டைகள் எல்லாம் நின்றுவிடும்." என்று அவர் கூறியுள்ளார்.
1992ஆம் ஆண்டு அயோத்தியில் இருந்த பாபர் மசூதி இடிக்கப்பட்டது சட்டவிரோதமானது என்று இந்திய உச்ச நீதிமன்றம் 2019இல் தீர்ப்பு வழங்கியது.
ஆனால், பாபர் மசூதிக்கு அடியில் இந்து கோவில் புதையுண்டு இருப்பதால், பாபர் மசூதி இருந்த இடத்தில் ராமர் கோவில் கட்டுவதற்கு தனியாக மசூதி கட்டுவதற்கு தனியாக இடம் வழங்க உச்ச நீதிமன்றம் அப்போது உத்தரவிட்டது.