Page Loader
மும்பையில் இரண்டு நாட்களுக்கு வாகனங்களில் ஹாரன் அடிக்க தடை 
தேவையில்லாமல் ஹாரன் அடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

மும்பையில் இரண்டு நாட்களுக்கு வாகனங்களில் ஹாரன் அடிக்க தடை 

எழுதியவர் Sindhuja SM
Aug 08, 2023
02:19 pm

செய்தி முன்னோட்டம்

ஒலி மாசுப்பட்டை கட்டுப்படுத்தும் வகையில், ஆகஸ்ட் 9 மற்றும் 16ஆம் தேதிகளில் "நோ ஹான்கிங் டே" கடைப்பிடிக்கப்பட உள்ளதாக மும்பை போக்குவரத்துக் காவல்துறை அறிவித்துள்ளது. தேவையில்லாமல் ஹாரன் அடிப்பது, ஒலி மாசுப்பட்டை ஏற்படுவதுடன், உடல் நலத்தையும் பாதிப்பதால் இரண்டு நாட்களுக்கு ஹாரன் அடிக்க வேண்டாம் என்று மும்பை போக்குவரத்துக் காவல்துறை கேட்டுக்கொண்டுள்ளது. வாகன ஓட்டிகள் தங்கள் வாகனங்களின் ஹாரன்கள் மற்றும் சைலன்சர்கள், 1989ஆம் ஆண்டின் மத்திய மோட்டார் வாகன விதிகளின் கீழ் உள்ள வழிகாட்டுதல்களின்படி இருப்பதை உறுதி செய்ய வேண்டும் என்றும் மும்பை போக்குவரத்து காவல்துறை பிறப்பித்த உத்தரவில் கூறப்பட்டுள்ளது.

ஜிகிவ்க்ள்

ஹாரன் அடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்

மேலும், தேவையில்லாமல் ஹாரன் அடிப்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. தேவையில்லாமல் ஹாரன் அடிப்பவர்கள் மீது பிரிவு 194(F) MV சட்டத்தின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், 2 அல்லது 4 சக்கர வாகனங்களின் சைலன்சர்கள்/எக்ஸாஸ்ட் பைப்புகளை மாற்றியமைத்தவர்கள் மீது M.V. சட்டத்தின் பிரிவு 198இன் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் உத்தரவில் கூறப்பட்டுள்ளது."ஆகஸ்ட்-9 மற்றும் 16ஆம் தேதிகள் மற்றும் பிற நாட்களில், ஆம்புலன்ஸ்கள், தீயணைப்புப் படைகள் மற்றும் அவசர பணிகளில் இருக்கும் பிற வாகனங்களைத் தவிர, மும்பை நகரத்தில் உள்ள அனைத்து ஓட்டுநர்களும் ரைடர்களும் தங்கள் வாகனத்தின் ஹாரன்களை அடிக்க வேண்டாம் என்று மும்பை போக்குவரத்துக் கட்டுப்பாட்டுப் பிரிவு கேட்டுக்கொள்கிறது." என்று மும்பை போக்குவரத்துக் காவல்துறை கூறியுள்ளது.