Page Loader
கட்டுப்பாட்டை இழந்த இந்தியக் கடற்படை படகு, படகில் லைப் ஜாக்கெட் இல்லை: மும்பை படகு விபத்திற்கான காரணிகள்
கவிழ்ந்து கிடைக்கும் சுற்றுலா படகு

கட்டுப்பாட்டை இழந்த இந்தியக் கடற்படை படகு, படகில் லைப் ஜாக்கெட் இல்லை: மும்பை படகு விபத்திற்கான காரணிகள்

எழுதியவர் Venkatalakshmi V
Dec 19, 2024
08:38 am

செய்தி முன்னோட்டம்

மும்பை கடற்கரையில் கடற்படையின் ஸ்பீட் போட் ஒன்று கட்டுப்பாட்டை இழந்து தனியார் சுற்றுலா படகில் மோதியதில் 13 பேர் உயிரிழந்துள்ளனர். இந்த விபத்திற்கான முதற்கட்ட விசாரணையில் கடற்படை படகில் பயணம் செய்தவர்களுக்கு லைஃப் ஜாக்கெட்டுகள் வழங்கப்படவில்லை என்பதை வெளிப்படுத்தினர். அதனால் உயிர்சேதம் மேலும் அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது. கேட்வே ஆஃப் இந்தியாவிலிருந்து எலிபெண்டா தீவுக்கு 110 பயணிகளுடன் சென்ற படகு, கடற்படையின் விரைவுப் படகுடன் மோதியதில் கவிழ்ந்தது. இந்த விபத்தில் இதுவரை 115 பேர் மீட்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்தனர். படகு விபத்தில் உயிர் பிழைத்தவரின் புகாரின் அடிப்படையில் கடற்படை விரைவுப் படகு ஓட்டுநர் மீது போலீஸார் எஃப்ஐஆர் பதிவு செய்துள்ளனர்.

அறிக்கை

கடற்படையின் அறிக்கை தெரிவிப்பது என்ன?

இந்திய கடற்படை அறிக்கையின்படி, கடற்படையின் ஸ்பீட் போட் ஒன்று என்ஜின் சோதனையின் போது ஏற்பட்ட கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்து சுற்றுலா படகு மீது மோதியதால் விபத்து ஏற்பட்டது. வேகப் படகு இயந்திர சோதனைக்கு உட்படுத்தப்பட்ட ஒரு திடமான ஊதப்பட்ட படகு (RIB) என்றும், இயந்திரக் கோளாறு காரணமாக கட்டுப்பாட்டை இழந்ததாகவும் கடற்படை தெரிவித்துள்ளது. இறந்தவர்களில் கடற்படை படகில் இருந்த இருவர் உட்பட 12 பொதுமக்களும், இந்திய கடற்படை அதிகாரி ஒருவரும் அடங்குவர். வேகப் படகில் இருந்த ஒரு கடற்படை அதிகாரி மற்றும் அசல் உபகரண உற்பத்தியாளரின் (OEM) இரண்டு ஊழியர்களும் கொல்லப்பட்டவர்களில் அடங்குவர். சுற்றுலா படகில் இருந்த 115 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர்.

ட்விட்டர் அஞ்சல்

Twitter Post

நிவாரணம்

நிவாரணம் அறிவித்த மத்திய அரசும், மாநில அரசும்

மும்பை படகு விபத்தில் இதுவரை 101 பேர் மீட்கப்பட்டதாக மகாராஷ்டிர முதல்வர் தேவேந்திர ஃபட்னாவிஸ் தெரிவித்துள்ளார். மேலும் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா 5 லட்சம் ரூபாய் நிவாரணம் வழங்கப்படும் என மகாராஷ்டிர முதல்வர் அறிவித்துள்ளார். அதேபோல்,விபத்து குறித்து அதிர்ச்சியடைந்ததாக குறிப்பிட்ட பிரதமர் மோடியும், விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு தலா ரூ.2 லட்சமும், காயமடைந்தவர்களுக்கு ரூ.50 ஆயிரமும் வழங்கப்படும் என அறிவித்துள்ளார். உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங்கும் இரங்கல் தெரிவித்துள்ளார்.