மும்பையின் கேட்வே ஆஃப் இந்தியா அருகே சுற்றுலா படகு கவிழ்ந்து விபத்து; மீட்பு பணிகள் தீவிரம்
70-க்கும் மேற்பட்ட பயணிகளுடன் சென்ற சுற்றுலா படகு மும்பையில் பிரபலமான கேட்வே ஆஃப் இந்தியா அருகே கவிழ்ந்ததில் ஒருவர் உயிரிழந்தார் மற்றும் பலர் காணாமல் போயுள்ளனர். நீல்கமல் என்ற படகு எலிபெண்டா குகைகளில் இருந்து கேட்வே ஆஃப் இந்தியாவுக்கு பயணிகளை ஏற்றிச் சென்றபோது இந்த சம்பவம் நடந்துள்ளது. 66 பேர் மீட்கப்பட்ட நிலையில், இன்னும் 12 பேரை தேடும் பணி நடைபெற்று வருவதாக செய்தி நிறுவனம் பிடிஐ தெரிவித்துள்ளது. லைஃப் ஜாக்கெட்டுகளை அணிந்திருந்த பயணிகள் காப்பாற்றப்பட்டு வேறு படகுக்கு மாற்றப்படுவதை காட்சியில் இருந்து வீடியோ காட்சிகள் காட்டுகிறது. கடற்படை மற்றும் கடலோர காவல்படை தலைமையில் பெரிய அளவிலான மீட்பு பணி நடைபெற்று வருகிறது.
சிறிய படகு வேகமாக மோதியதில் விபத்து
இன்று மாலை மாலை சுமார் 4 மணியளவில் படகு எலிபென்டா தீவில் இருந்து திரும்பி கொண்டிருந்த நேரத்தில், அதன் மீது சிறிய அதிவேகப்படகு ஒன்று மோதியுள்ளது. இதில், சுற்றுலாப்பயணிகள் சென்ற படகு மூழ்க ஆரம்பித்தது. ஆபத்தை உணர்ந்த படகு ஊழியர்கள், அவசர உதவி கோரி கடலோர காவல் படைக்கு தகவல் தெரிவித்தனர். உடனே விரைந்து வந்த கடலோர காவல்படை மீட்பு பணியில் இறங்கியுள்ளனர். மீட்புப்பணியில் 11 கடற்படை படகுகள், மூன்று மரைன் போலீஸ் கப்பல்கள் மற்றும் ஒரு கடலோர காவல்படை படகுகள் பணிக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளன. கூடுதலாக, நான்கு ஹெலிகாப்டர்கள், ஜவஹர்லால் நேரு துறைமுக ஆணையத்தின் வளங்கள் மற்றும் உள்ளூர் மீனவர்கள் இந்த நடவடிக்கைக்கு உதவுகிறார்கள். உயிரிழந்தோர் எண்ணிக்கை அதிகரிக்கும் என்று அஞ்சப்படுகிறது.