LOADING...
இங்கிலாந்து அரசர் முடிசூட்டு விழாவிற்கு கோலாகலமாக தயாராகும் மும்பை டப்பாவாலாக்கள்
மும்பையில் உள்ள டப்பாவால்கள், முடிசூட்டு விழாவை முன்னிட்டு சார்லஸ் மன்னருக்கு பல விலையுயர்ந்த பரிசுகளை வாங்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன

இங்கிலாந்து அரசர் முடிசூட்டு விழாவிற்கு கோலாகலமாக தயாராகும் மும்பை டப்பாவாலாக்கள்

எழுதியவர் Venkatalakshmi V
May 03, 2023
03:17 pm

செய்தி முன்னோட்டம்

இங்கிலாந்து ராணி எலிசபெத் சென்ற ஆண்டு, செப்டம்பர் மாதம், வயது மூப்பின் காரணமாக மறைந்தார். அவருக்கு அடுத்தபடியாக அரச பட்டம், அவரின் மகன் சார்லஸ்-இற்கு சென்றது. இவரின் முடிசூட்டு விழா வரும் சனிக்கிழமை, மே 6 ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்காக லண்டன் மாநகரமே கொண்டாட்டங்களில் ஈடுபட்டுள்ளது. இந்த விழாவிற்கு, உலகின் பல முக்கிய பிரபலங்கள் அனைவர்க்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது. குறிப்பாக, இங்கிலாந்து பேரரசின் கீழ் இருந்த அனைத்து நாடுகளும் பங்கு கொள்ளும். இந்நிலையில், இந்தியாவின் மும்பை நகரில் பிரபலமான டப்பாவாலாக்களுக்கும் அழைப்பு விடப்பட்டுள்ளது என டப்பாவாலாக்கள் சங்க தலைவர் கூறியுள்ளார். அந்த விழாவில் பங்குகொள்ளும் போது, மன்னருக்கு பரிசளிக்க அவர்கள், விலையுயர்ந்த பரிசுகளையும் வாங்கியுள்ளதாக செய்திகள் கூறுகின்றன.

ட்விட்டர் அஞ்சல்

இங்கிலாந்து அரசருக்கு பரிசுகள் வாங்கும் டப்பாவாலாக்கள்