இந்தியா என்னும் பெயரை 'பாரத்' என மாற்றுவதற்கான செலவு குறித்து எம்.பி.சு.வெங்கடேசன்
'இந்தியா' என்னும் பெயரை 'பாரத்' என மாற்றுவதற்கான செலவு குறித்து எம்.பி.,சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். அதில், இந்தியா பெயரினை மாற்ற ஆகக்கூடிய செலவான ரூ.14,000கோடி தமிழகத்தில் துவங்கப்பட்டுள்ள 17லட்சம் ஏழை மாணவர்கள் பயனடையும் காலை உணவுத்திட்டத்தின் 30 ஆண்டுகால செலவுக்கு சமானம் என்று கூறியுள்ளார். மேலும் ஓர் விளக்கப்படத்தினையும் அதில் பதிவிட்டு, 2023ம் நிதியாண்டியில் நாட்டின் மொத்த வருமானம் ரூ.23.84கோடி. இத்தொகையோடு மார்க்கெட்டிங் பட்ஜெட் என்னும் 0.06ஐ பெருக்கினால் ரூ.14,304கோடி வருகிறது என்று குறிப்பிட்டுள்ளார். வரும் 9-10தேதிகளில் நடக்கவுள்ள ஜி20 மாநாடு அழைப்பிதழில் 'President of India'என்பதற்கு பதிலாக 'President of Bharat'என அச்சடிக்கப்பட்டுள்ளது. இதனை அடிப்படையாக கொண்டே மத்திய அரசு பெயர்மாற்றம் செய்ய முடிவுச்செய்துள்ளதாக சர்ச்சை எழுந்துள்ளது குறிப்பிடத்தக்கது.