டெல்லியில் தச்சர்களை சந்தித்தார் காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி
செய்தி முன்னோட்டம்
டெல்லியில் கிருத்திநகர் பகுதியில் அமைந்துள்ள ஆசியாவிலேயே மிகப்பெரிய மரச்சந்தையை காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பார்வையிட்டார்.
காங்கிரஸ் முன்னாள் தலைவரும் வயநாடு எம்பியுமான ராகுல் காந்தி, விவசாயிகள், போர்ட்டர்கள்(சுமை தூக்குபவர்கள்) என பல்வேறு துறையினரையும் சந்தித்து வருகிறார்.
அந்த வகையில் டெல்லியில் ஆசியாவில் மிகப்பெரிய மரச்சந்தையில் தச்சர்களை ராகுல் காந்தி இன்று சந்தித்தார்.
இது குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
"நான் இன்று ஆசியாவிலேயே மிகப்பெரிய மரச்சந்தைக்கு சென்று தச்சர் சகோதரர்களை சந்தித்தேன்"
"அவர்கள் கடின உழைப்பாளிகள் மட்டுமல்ல, திறமையான கலைஞர்களும் கூட, மரங்களை செதுக்குவதில் நிபுணத்துவர்கள்"
"நாங்கள் நிறைய பேசினோம், அவர்கள் திறமைகள் பற்றி கொஞ்சம் தெரிந்து கொண்டேன், கொஞ்சம் கற்றுக் கொள்ளவும் முயற்சித்தேன்" என பதிவிட்டு இருந்தார்.
ட்விட்டர் அஞ்சல்
தச்சர்களை சந்தித்தார் ராகுல் காந்தி
Delhi | Congress MP Rahul Gandhi visits the furniture market at Kirti Nagar and interacts with carpenters there.
— ANI (@ANI) September 28, 2023
(Pictures: Congress) pic.twitter.com/Y0GuNgcWjo