Page Loader
புதுச்சேரியில் திடீரென செத்து மடிந்த 400 வாத்துக்கள் - காவல்துறை விசாரணை
புதுச்சேரியில் திடீரென செத்து மடிந்த 400 வாத்துக்கள் - காவல்துறை விசாரணை

புதுச்சேரியில் திடீரென செத்து மடிந்த 400 வாத்துக்கள் - காவல்துறை விசாரணை

எழுதியவர் Nivetha P
Feb 16, 2023
02:13 pm

செய்தி முன்னோட்டம்

புதுச்சேரி ரெட்டிச்சாவடி அடுத்துள்ள அழிச்சி பட்டு கிராமத்தை சேர்ந்த மீனா தனது குடும்பத்துடன் சுமார் 1500க்கும் மேற்பட்ட வாத்துகளை வளர்த்து வருகிறார். இந்நிலையில் வழக்கம் போல் இவர் பாகூர் சேலியமேடு வயல்வெளியில் வாத்துக்களை மேய்ச்சலுக்கு கொண்டு சென்று விட்டுள்ளார். வயல்வெளியில் மேய்ந்து கொண்டிருந்த வாத்துக்கள் சில மணி நேரங்களுக்கு பின்னர் ஒன்றன் ஒன்றாக பலியாக துவங்கியுள்ளது. இதனை பார்த்து அலறி துடித்த மீனா தனது உதவிக்காக அக்கம் பக்கத்தினரை அழைத்துள்ளார். அதனையடுத்து அருகில் இருந்த விவசாயிகள் ஓடிவந்து வாத்துக்களை பார்த்தனர். பின்னர் அவர்களுக்கு தெரிந்த வைத்தியங்கள் செய்து முயற்சிகளை மேற்கொண்டனர்.

தீவிர விசாரணை

புதுச்சேரி கால்நடை துறைக்கு இறந்த வாத்துக்கள் அனுப்பி வைப்பு

எனினும், அதற்குள் 400 வாத்துக்கள் அடுத்தடுத்து மடிந்து சரிந்து விழுந்தது. செய்வதறியாது நின்று அப்பகுதி மக்கள் பின்னர் பாகூர் காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளனர். அதன் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த போலீசார், ஆய்வினை மேற்கொண்டனர். அதன் பின்னர் 400க்கும் மேற்பட்ட வாத்துக்கள் இறந்துவிட்டது என்பதனை உறுதி செய்து கொண்டனர். இதனை தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து காவல்துறை புதுச்சேரி கால்நடை துறைக்கு தகவல் அளித்தனர். மேலும் இறந்த வாத்துகளை ஆய்விற்காக அங்கு அனுப்பியும் வைத்தனர். இச்சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ள நிலையில் அப்பகுதி மக்களிடம் காவல் துறையினர் தங்களது விசாரணையினை மேற்கொண்டு வருகிறார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.