
அடுத்த 2 மணிநேரத்தில் சென்னை உட்பட 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
செய்தி முன்னோட்டம்
சென்னை மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் இன்று காலை முதல் வானம் மேகமூட்டத்துடன் காணப்படுகிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில், தென்மேற்கு வங்கக்கடல் பகுதிகளின் மேல் வளிமண்டல சுழற்சி நிலவுவதாலும், மேற்கு திசை காற்றின் வேகமாறுபாடு காரணமாக அடுத்த சில மணிநேரத்தில் தமிழகம் மற்றும் புதுச்சேரியில் ஒரு சில மாவட்டங்களில் இன்று மழை பெய்வதற்கான வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளது.
குறிப்பாக, தமிழகத்தில் அடுத்த 2 -3 மணி நேரத்தில், சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் உட்பட 10 மாவட்டங்களில் இடியுடன் கூடிய மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
இதனை தனியார் வானிலை ஆராய்ச்சியாளர்கள் சிலரும் உறுதி செய்துள்ளனர்.
ட்விட்டர் அஞ்சல்
மழைக்கு வாய்ப்பு!
#வானிலைசெய்திகள் | அடுத்த 3 மணி நேரத்தில் 10 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு!#SunNews | #TNRain | #WeatherUpdate pic.twitter.com/IjeBreTcfr
— Sun News (@sunnewstamil) July 3, 2023