தமிழ்நாட்டில் இன்று முதல் வரும் 27ம் தேதி வரை மழைக்கு வாய்ப்பு
தென்கிழக்கு அரபிக்கடலில் வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுவதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதன் காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் இன்று(டிச.,21)ஒருசில இடங்களில் இடி-மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்யும் என்று கூறப்பட்டுள்ளது. அதேபோல், 27ம்.,தேதி வரை தமிழ்நாடு, புதுச்சேரி, காரைக்கால் உள்ளிட்ட பகுதிகளில் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதனைத்தொடர்ந்து, சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் அடுத்த 48 மணிநேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும் என்றும், நகரின் ஒருசில பகுதிகளில் லேசான மழை பெய்யக்கூடும் என்றும் கூறப்பட்டுள்ளது. மேலும் சென்னையில் குறைந்தபட்ச வெப்பநிலை 24-25 டிகிரி செல்ஸியஸாகவும், அதிகபட்ச வெப்பநிலை 30-31 டிகிரி செல்ஸியஸாகவும் பதிவாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.