சென்னை பிராட்வே பஸ் ஸ்டாண்டின் புதிய பேருந்து நிலையத்தின் வரைபடம் வெளியீடு
சென்னை நகருக்குள் செயல்பட்டு வரும் முக்கிய பேருந்து நிலையமான பிராட்வே பேருந்து நிலையத்தைத் தற்காலிகமாகத் தீவுத் திடலுக்கு இடமாற்றம் செய்ய சென்னை மாநகராட்சி திட்டமிட்டுள்ளதாக ஏற்கனவே நமது தமிழ் நியூஸ் பைட்ஸ்-இல் தெரிவித்திருந்தோம். பிராட்வே பேருந்து நிலையத்தை, மல்டி மாடல் இன்டகிரேஷன்(Multi Model Integration) போக்குவரத்து முனையம் அமைக்க இருப்பதனால், இந்த தற்காலிக மாற்றம் செய்யப்படுகிறது. இந்த தற்காலிக மாற்றத்திற்காக தீவுத்திடலில் சென்னை மாநகராட்சி சார்பில் அடிப்படை கட்டிடம் அமைக்கப்பட்ட பின்னர், பிராட்வே பேருந்து நிலையம் தீவுத்திடலுக்கு இடமாறும். மறுபக்கம் பிராட்வே பேருந்து நிலையம் இடிக்கப்பட்டு 9 மாடிகள் கொண்ட வணிக வளாகத்துடன் கூடிய மாடர்ன் பேருந்து நிலையம் அமைக்கப்படவுள்ளது. இந்த புதிய பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் தற்போது வெளியாகியுள்ளது.
புதிய பேருந்து நிலையம்
#BREAKING | நவீன வசதிகளுடன் கட்டமைக்கப்படும் பிராட்வே பேருந்து நிலையத்தின் மாதிரி புகைப்படம் வெளியீடு ரூ.823 கோடி செலவில் வணிக வளாகத்துடன் கூடிய புதிய பேருந்து நிலையம் அமைக்க சென்னை மாநகராட்சி நிா்வாகம் முடிவு செய்துள்ளது பிராட்வே பேருந்து நிலையம் தற்காலிகமாக தீவுத்திடலுக்கு... pic.twitter.com/pmdPch3zSR— Thanthi TV (@ThanthiTV) May 21, 2024