
கூட்டணி குறித்து பேச முதல்வர் ஸ்டாலினை சந்திக்கவுள்ளார் ம.நீ.ம தலைவர் கமல்ஹாசன்
செய்தி முன்னோட்டம்
மக்கள் நீதி மய்யத்தின் தலைவர் கமல்ஹாசன், கூட்டணி குறித்தும், தொகுதி ஒதுக்கீடு குறித்தும் கலந்துரையாட, முதல்வர் ஸ்டாலினை விரைவில் சந்திக்கவுள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.
முன்னதாக, ம.நீ.ம கட்சியினருடன் நடத்தப்பட்ட பொதுக்குழுவில், கட்சியின் வெற்றிக்கு உழைக்க வேண்டும் என கட்சியினரை கேட்டுக்கொண்ட கமல், கூட்டணி குறித்து தான் முடிவெடுக்கவுள்ளதாக தெரிவித்தார்.
ஆரம்ப காலத்தில், திமுகவை எதிர்த்து தான் அரசியலில் இறங்கினார் கமல்ஹாசன் என்பது குறிப்பிடத்தக்கது.
ஆனால் சமீபகாலங்களில் அவர் திமுக அரசோடு இணக்கமான அணுகுமுறையை காட்டி வருவதும் குறிப்பிடவேண்டியது
முதல்வர் ஸ்டாலின், இன்று தான் ஸ்பெயின் நாட்டில் இருந்து சென்னை வந்தார்.
தொழில் முதலீடுகளை ஈர்ப்பதற்காக ஸ்பெயின் நாட்டிற்கு அரசு முறை பயணமாக சென்றிருந்தார் முதலமைச்சர் ஸ்டாலின்.
ட்விட்டர் அஞ்சல்
ஸ்டாலினை சந்திக்கவுள்ளார் கமல்ஹாசன்
#JUSTIN | விரைவில் முதல்வரை சந்திக்கிறார் கமல்#KamalHaasan | #MNM | #DMK | #MKStalin pic.twitter.com/1opqQM8DUZ
— PuthiyathalaimuraiTV (@PTTVOnlineNews) February 7, 2024