அமுல் பால் கொள்முதலினை தடுத்து நிறுத்த கோரி அமித்ஷா'வுக்கு கடிதம் எழுதினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
செய்தி முன்னோட்டம்
குஜராத் மாநிலத்தின் அமுல் பால் நிறுவனமானது சமீப காலமாக தமிழகத்தின் வடமாவட்டங்களில் கொள்முதல் செய்து வருவதால் தமிழகஅரசின்கீழ் செயல்பட்டு வரும் ஆவின் பால்நிறுவன உற்பத்திக்கு கடுமையான பாதிப்பு ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அமுல்பால் நிறுவனமானது கிராமங்களில் உள்ள கூட்டுறவுஅமைப்பு, சுயஉதவி குழுக்களை கொண்டு பால் சேகரிப்புநிலையம் ஆகியனவற்றை அமைத்து பால் கொள்முதலில் அதிக லாபம் ஈட்ட விருப்பமுள்ளவர்கள் தொடர்புக்கொள்ளலாம் என்று அறிவித்துள்ளது.
இதனால் தமிழகத்தின் வடமாவட்டத்திலுள்ள விவசாயிகள் அமுல்நிறுவனத்தினை அணுகுவதாக தெரிகிறது.
ஏற்கனவே பால் பற்றாக்குறை நிலவிவரும் நிலையில்,அமுலின் இந்த நடவடிக்கை நுகர்வோரிடையே பல சிக்கல்களை ஏற்படுத்தக்கூடும்.
இதனால் தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின், தமிழகத்தில் அமுல்பால் கொள்முதல் செய்வதைத்தடுத்து நிறுத்தவேண்டும் என்று கோரி மத்திய உள்துறைஅமைச்சர் அமித்ஷா அவர்களுக்கு கடிதம் எழுதியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#BREAKING | தமிழ்நாட்டில் அமுல் பால் கொள்முதலை நிறுத்தக் கோரி உள்துறை அமைச்சர் அமித்ஷாவுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம்!#SunNews | #AmulMilk | @mkstalin pic.twitter.com/AWfkfLSVq7
— Sun News (@sunnewstamil) May 25, 2023