
தீவிர சிகிச்சைப்பிரிவில் இரண்டாவது நாளாக துரை தயாநிதி
செய்தி முன்னோட்டம்
கருணாநிதியின் பேரனும், மு.க. அழகிரியின் மகனுமான துரை தயாநிதி, நேற்று அப்போல்லோ மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என்ற செய்திகள் வெளியானது.
இது குறித்து ஹிந்து தமிழில் வெளியான செய்தியின்படி, துரை தயாநிதிக்கு நேற்று காலை திடீரென உடல் நலக்குறைவு ஏற்பட்டதாக தெரிகிறது.
அவர் மூர்ச்சையடைந்து விழுந்துள்ளார் எனவும் கூறப்படுகிறது.
உடனே மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவரை பரிசோதித்த மருத்துவர்கள், அவரின் மூளை ரத்த நாளத்தில் ஆறு இடங்களில் அடைப்பு இருப்பது கண்டறியப்பட்டதாகவும் கூறுகின்றனர்.
இதனை அடுத்து அவருக்கு உடனடி சிகிச்சை மேற்கொள்ளப்பட்டு, தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
அவரை நேற்று முதல்வர் ஸ்டாலின் நேரில் சென்று நலம் விசாரித்துள்ளார்.
ட்விட்டர் அஞ்சல்
Twitter Post
#DuraiDayanidhi 🏴🚩 pic.twitter.com/ehJZa99v36
— Divine Ashwin (@DivinityJudo) December 7, 2023