NewsBytes Tamil
    English Hindi Telugu
    மேலும்
    English Hindi Telugu
    NewsBytes Tamil
    இந்தியா
    உலகம்
    வணிகம்
    விளையாட்டு
    தொழில்நுட்பம்
    பொழுதுபோக்கு
    ஆட்டோ
    வாழ்க்கை
    காட்சிக் கதைகள்

    எங்களைப் பின்தொடரவும்
    • Facebook
    • Twitter
    • Linkedin
    வீடு / செய்தி / இந்தியா செய்தி / தீவிரப்படுத்தப்படும் வெற்றி துரைசாமி உடலின் தேடல்; வெளியான அதிர்ச்சி தகவல்
    அடுத்த செய்திக் கட்டுரை
    தீவிரப்படுத்தப்படும் வெற்றி துரைசாமி உடலின் தேடல்; வெளியான அதிர்ச்சி தகவல்
    வெற்றி துரைசாமி பயணம் செய்த கார் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி விபத்திற்குள்ளானது

    தீவிரப்படுத்தப்படும் வெற்றி துரைசாமி உடலின் தேடல்; வெளியான அதிர்ச்சி தகவல்

    எழுதியவர் Venkatalakshmi V
    Feb 07, 2024
    09:32 am

    செய்தி முன்னோட்டம்

    சென்னை மாநகராட்சியின் முன்னாள் மேயர் சைதை துரைசாமியின் மகன், வெற்றி துரைசாமியின் உடலை தேடும் பணி முடுக்கப்பட்டுள்ளது.

    தனது நண்பர் கோபிநாத் என்பவருடன் ஹிமாச்சல பிரதேசத்திற்கு சுற்றுலா சென்ற வெற்றி துரைசாமி பயணம் செய்த கார் கடந்த பிப்ரவரி 5ஆம் தேதி விபத்திற்குள்ளானது.

    காசாங் நாலா தேசிய நெடுஞ்சாலையில் கார் சென்று கொண்டிருந்த போது, அந்த காரின் ஓட்டுநருக்கு நெஞ்சுவலி ஏற்பட்டுள்ளது.

    இதனால், நிலைகுலைந்த கார், மலைப்பகுதியில் இருந்து கவிழ்ந்து சட்லஜ் ஆற்றில் விழுந்து விபத்துக்குள்ளானது.

    இந்த விபத்தில் கார் ஓட்டுநர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த நிலையில், கோபிநாத் படுகாயங்களுடன் மீட்க்கப்பட்டு, தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

    ஆனால், காரில் பயணம் செய்த வெற்றி துரைசாமியின் நிலை என்ன என்பது இன்று வரை தெரியவில்லை.

    தேடுதல்

    மீட்கப்பட்ட மனித பாகங்கள்

    இந்த நிலையில், மகனை பற்றி தகவல் தெரிவிப்பவர்களுக்கு, ரூ. 1 கோடி வழங்கப்படும் என்று சைதை துரைசாமி நேற்று அறிவித்தார்.

    இந்த நிலையில், தீவிர தேடுதல் வேட்டையில் இந்திய விமானப்படை, தேசிய பேரிடர் மீட்புக்குழுவினர் உள்ளிட்டோர் ஈடுபட்டுள்ளனர்.

    இந்த சூழலில் தான், ஆற்றங்கரையில் இருந்து மனித உடலின் சில பகுதிகள் கிடைத்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    அவை காணாமல் போன வெற்றி துரைசாமியின் உடல் பாகமாக இருக்கலாம் என்ற சந்தேகத்தில் டி.என்.ஏ. பரிசோதனைக்காக அனுப்பப்பட்டுள்ளதாக அம்மாநில போலீசார் தெரிவித்துள்ளனர்.

    மகன் காணாமல் போன தகவல் அறிந்ததும், சைதை துரைசாமி ஹிமாச்சல பிரதேசத்திற்கு விரைந்துள்ளார்.

    ட்விட்டர் அஞ்சல்

    டி.என்.ஏ. பரிசோதனை

    This is extremely sad … No parent should go through this … heartfelt condolences 😔😔 #VetriDuraisamy #saidaiduraisamy https://t.co/qLELdsOyyT

    — Dr M K SHARMILA (@DrSharmila15) February 6, 2024
    Facebook
    Whatsapp
    Twitter
    Linkedin
    தொடர்புடைய செய்திகள்
    சமீபத்திய
    ஹிமாச்சல பிரதேசம்
    சென்னை
    சென்னை மாநகராட்சி

    சமீபத்திய

    பாகிஸ்தான் சூப்பர் லீக் காலவரையறை இன்றி நிறுத்ததி வைப்பதாக அறிவித்தது பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் கிரிக்கெட்
    பஞ்சாபின் ஃபிரோஸ்பூரில் பொதுமக்களை குறிவைத்து பாகிஸ்தான் ட்ரோன் தாக்குதல்; மூன்று பேருக்கு காயம் பஞ்சாப்
    ஸ்ரீநகர் விமான நிலையத்தை குறிவைத்து ட்ரோன் தாக்குதல் முயற்சி? பாதுகாப்புப்படை எதிர் நடவடிக்கை ஜம்மு காஷ்மீர்
    இந்தியாவிற்குள் அத்துமீறி ஊடுருவிய பாகிஸ்தான் ட்ரோன்களை சுட்டு வீழ்த்தியது பாதுகாப்புப்படை இந்தியா

    ஹிமாச்சல பிரதேசம்

    அதானி வில்மர் நிறுவனத்தில் அதிரடி ரெய்டு! சிக்கியது என்ன? தொழில்நுட்பம்
    90,000 ரூபாய் மதிப்புள்ள ஸ்கூட்டிக்கு 1 கோடி செலவழித்த நபர்! மாநிலங்கள்
    அமெரிக்காவில் பிறந்த சிறுவனை பௌத்தத்தின் 3வது உயர்ந்த தலைவராக தலாய் லாமா அறிவித்தார் அமெரிக்கா
    இமாச்சல் வரை பரவிய H3N2 வைரஸ்: 10 வார குழந்தைக்கு பாதிப்பு இந்தியா

    சென்னை

    கிளாம்பாக்கத்தில் புதிய ரயில் நிலையம் அமைக்க திட்டம் - ரூ.20 கோடி நிதி ஒதுக்கீடு ரயில் நிலையம்
    நடிகர் விஜய் மீது காலணி வீசப்பட்டது தொடர்பாக காவல் நிலையத்தில் புகார் நடிகர் விஜய்
    ஜனவரி 9ம் தேதி முதல் வேலைநிறுத்தம்- அறிவிப்பை வெளியிட்ட போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தமிழ்நாடு
    கொரோனா தொற்று பாதிப்பால் சென்னையில் ஒருவர் உயிரிழப்பு  கொரோனா

    சென்னை மாநகராட்சி

    காலை சிற்றுண்டி திட்டம்: தனியாரிடம் ஒப்படைக்க தீர்மானம் மு.க ஸ்டாலின்
    மிக்ஜாம் புயல்: சென்னை மக்களுக்கு CMDA வெளியிட்டுள்ள அறிவிப்பு  புயல் எச்சரிக்கை
    பொதுமக்கள் தேவையின்றி வெளியே வரவேண்டாம் - சென்னை மாநகராட்சி அறிவுறுத்தல்  கனமழை
    சென்னை எம்எல்ஏக்கள் வெளியில் வந்து மக்களுக்கு சேவை செய்ய வேண்டும்- விஷால் வலியுறுத்தல் விஷால்
    எங்களை பற்றி தனியுரிமைக் கொள்கை விதிமுறைகளும் நிபந்தனைகளும் எங்களை தொடர்பு கொள்ள நெறிமுறை நடத்தை குறை நிவர்த்தி செய்தி செய்தி காப்பகம் தலைப்புகள் காப்பகங்கள்
    எங்களைப் பின்தொடரவும்
    Facebook Twitter Linkedin
    All rights reserved © NewsBytes 2025